கேம் சேஞ்சர் விஜய்.. அமைச்சர்களுக்கு அதிர்ச்சி! சட்டென மாறிய தமிழக அரசியல் களம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரப்படி, திமுகவுக்கு பல இடங்களில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடும் போட்டியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிட்டிருந்தார். அவரை எதிர்த்து என்டிஏ கூட்டணி சார்பில் அமுகவின் ராஜசேகரனும், தவெக சார்பில் ராமமூர்த்தியும் களம் இறங்கியிருந்தனர்.

TVK

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முதல்கட்ட நிலவரப்படி, கே.என்.நேருவை விட அதிக வாக்குகளை பெற்று தவெக வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.என்.நேரு 4,261 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் 4,535 வாக்குகள் பெற்று 292 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

அதேபோல, சைதாப்பேட்டையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பின்னடைவை சந்தித்திருக்கிறார். மேலும், அமைச்சர் கீதாஜீவனும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன், ஆலந்தூரில் த.மோ.அன்பரசன், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருமயம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பின்னடைவை சந்தித்திருக்கின்றனர். மொத்தமாக திமுகவின் 36 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்திருக்கின்றனர்.

தற்போது வரை தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் மின்னணு வாக்கு பெட்டியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, நிலவரம் அறிவிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+