நிலவரம் இப்போ கலவரம்! தட்டித் தூக்குது தவெக! பலிக்குமா ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு! தவிக்கும் திமுக!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழக ஒன்பதரை மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்பு பலிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. காரணம், பெரும்பாலான கணிப்புகள் திமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ள நிலையில், இந்த நிறுவனம் மட்டும் முதன்முறையாக தேர்தலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என கணித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த கணிப்பின் படி, தமிழக வெற்றி கழகம் 98 முதல் 120 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும், திமுக 92 முதல் 110 இடங்கள் வரை மட்டுமே பெறும் என்றும் கூறப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணி 22 முதல் 32 இடங்களில் தான் வெற்றி பெறும் எனவும் அந்த கணிப்பு தெரிவித்துள்ளது.

இதனால், தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு தமிழக வெற்றி கழகத்துக்கு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குள் தான் ஆட்சிப் போட்டி இருந்து வந்தது.
ஆனால் இந்த முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் களம் இறங்கியதால் அரசியல் கணக்குகள் முழுவதும் மாறியுள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா 2021 தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என அதிக அளவில் கணித்திருந்தது. அதேபோல் திமுக 133 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனால், அந்த கணிப்புகள் முழுமையாக துல்லியமாக இல்லாவிட்டாலும், ஒரு அளவுக்கு மக்களின் ஆதரவு போக்கை காட்டியதாகவே பார்க்கப்பட்டது.
குறிப்பாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்கள் கிடைக்கும் என்ற கணிப்பு பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் மற்ற நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகள் பெரும்பாலும் திமுகக்கு சாதகமாகவே இருந்தன. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளின் படி தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருக்கிறது. அதிர்ச்சி தரும் விதமாக திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆக்ஸிஸ் மை இந்தியா கணிப்பின்படி 90 முதல் 120 இடங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைக்கும் என சொல்லி இருந்த நிலையில் தற்போது அந்த நிலையில்தான் தமிழக வெற்றிக்கழகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications