திராவிட கட்சிகளுடன் கூட்டணி.. 28 ஆம் தேதி முடிவு.. யூடர்ன் போடும் ராமதாஸ்.. அப்போ தவெக?
சென்னை: திராவிடக் கட்சிகளோடு தான் கூட்டணி இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ராமதாஸ் தவெக உடன் கூட்டணியில் இணையக்கூடும் எனப் பேசப்பட்டு வரும் நிலையில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனினும், பாமகவின் ராமதாஸ் தரப்பு இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், வட மாவட்டங்களில் வலுவாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சிப் பூசலால், ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அன்புமணி தரப்பு பாமக ஏற்கனவே, என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு இன்னும் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் இருந்து வருகிறது.
ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால், விசிக நிலைப்பாடு காரணமாக திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணைய முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தைலாபுரத்தில் இன்று தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்போது, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராமதாஸ், "இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய ராமதாஸ், "கூட்டணி குறித்து இன்றே முடிவு செ முடியாது. ஏனென்றால் அதற்கான களம் சரியாக அமையவில்லை. அதனால் நேரம் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்பேன். நமக்கான தேர்தல் வாகனம் தயாராகிவிட்டது. வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்" எனறு தெரிவித்துள்ளார்.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என ராமதாஸ் தெரிவித்துள்ளதன் மூலம், அவர் திமுக அல்லது அதிமுக கூட்டணி முடிவையே வெளிப்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது. அன்புமணி அதிமுக கூட்டணியில் ஏற்கனவே இருப்பதால் ராமதாஸ் அந்தக் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற விவாதங்களும் தீவிரமாக எழுந்துள்ளன.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications