விஜய் - திரிஷா சர்ச்சை பேச்சு.. உதயநிதி மீது 9 பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நீர் விவகாரம் தமிழக, கர்நாடகா மாநிலங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது. தண்ணீர் வழங்க வேண்டுமென தமிழகத்திலும், தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர் நேற்று திமுக நடத்திய போராட்டத்தில் முதலமைச்சர் விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இதுதொடர்பாக தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உதயநிதி மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் அணை கட்டுவதில் கறாராக உள்ளது. தண்ணீர் திறந்துவிட கோரி தமிழகத்திலும், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று கர்நாடகாவிலும் போராட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று, அம்மாநில முதலமைச்சர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போதைய சூழலுக்கு விஜய் கர்நாடகா வரவேண்டாம் என சிவக்குமார் கூறிவிட்டார்.

Udhayanidhi TVK


உதயநிதி சர்ச்சை பேச்சு

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஐ, தேமுதிக கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. இதில் எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சி இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மத்திய அரசு, கர்நாடகா அரசு, மெத்தனமாக உள்ள தவெக அரசு கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பேசிய உதயநிதி விஜய் குறித்து தான் அதிகம் விமர்சனம் செய்தார். நடிகை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு விஜயை விமர்சனம் செய்தது சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர் எல்லை மீறி பேசியுள்ளதாக கூறி வருகிறார்கள்.

தவெக இன்று போராட்டம்

உதயநிதியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தவெக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இதுகுறித்து தவெகவினர் கூறுகையில், "உதயநிதியின் பேச்சு மிகவும் மோசமாக இருந்தது. தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் நேற்று இரவு மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இன்று காலை உதயநிதியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும் உதயநிதி மீது மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கவுள்ளோம்" என்றனர்.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும்,பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் உதயநிதி மீது தஞ்சை போலீஸார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 - பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகியவற்றின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லம் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸாரும், திமுகவினரும் உதயநிதி வீட்டின் முன்பு குவிந்துள்ளதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் பலரும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+