விஜய் மானத்தை வாங்கும் அருண்ராஜ்.. சில்வர் டப்பாவையடுத்து, பூஸ்ட் பாட்டில்! தவெக ஸ்டிக்கரை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலவசங்கள் என்பதே அவமானம் என்கிற ரேஞ்சுக்கு தவெகவினர் பேசி வருகின்றனர். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளில் இலவச கேஸ், உதவித்தொகை என அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருந்தார் விஜய். இப்படி இருக்கையில், கட்சியினர் தேர்தலுக்கு பரிசு பொருட்களை கொடுக்க ரெடியாகியுள்ளனர்.

நேற்று முன்தினம், நாமக்கல்லில் தவெக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில்வர் டப்பா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. தற்போது, தவெக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பூஸ்ட் பாட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

TVK

வாக்காளர்களுக்கு வழங்கதான் இவை வைக்கப்பட்டிருக்கிறதா? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது?

இலவச பேருந்துகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த பேருந்து உதவிகரமானதாக இருக்கிறது. ஆனால், இப்படியான இலவசங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்புபவர்கள்தான் தவெகவினர். அவ்வளவு பேசும் தவெகெவினர், தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு சில்வர் டப்பாக்களை விநியோகிக்க முயற்சித்திருக்கின்றனர்.

சில்வர் பாட்டில்கள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மூட்டை மூட்டையாக, தவெக அருண்ராஜ் படம் ஒட்டப்பட்ட சில்வர் டப்பாக்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது அருண்ராஜ் மற்றும் விஜய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பூஸ்ட் பாட்டில்கள், விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பான வீடியோக்கள் பரவலாக ஷேராகி வருகின்றன.

உண்மை என்ன?

ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் தவெக அருண்ராஜ் மருத்துவ முகாம் நடத்தியிருந்தார். அப்போது மக்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்ததுதான் இந்த பூஸ்ட் பாட்டில்கள் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், அப்போது கூட இலவசமாகத்தான் அந்த பாட்டில்கள் அப்போது வழங்கப்பட்டிருக்கிறது. இலவசங்கள் குறித்து நீட்டி முழங்கிய தவெக, எதற்காக இலவசங்களை கொடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+