கூத்தாடிக்கு முத்தம்..எம்எல்ஏ பேசும் பேச்சா இது? தவாக வேல்முருகனை விளாசும் தவெக! கூட சேர்ந்த பிரபலம்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மாணவர்களை சந்தித்து கல்வி விருது வழங்கி வருகிறார். இந்த நிலையில் விருது வழங்கும் விழா குறித்து ஆபாசமாக பேசியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அரசியல் தாண்டி சினிமா விமர்சகர்களும் வேல்முருகனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்து கல்வி விருதுகளை வழங்கி வருகிறார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கும், மாற்றுத்திறன் மாணவ மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதியும், 4ஆம் தேதியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து பரிசுகள் வழங்கிய விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிகழ்ச்சியில் பேசிய அதன் நிறுவன தலைவரான வேல்முருகன் விஜய் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பேசிய அவர்," பெற்று வளர்த்து ஆளாக்கிய பெண்ணை, நாளை மாற்றான் வீட்டுக்கு மனைவியாக போகிற பெண்ணை.. அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது.. ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க. இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க.. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க.. ஆனால் இப்படி செய்யக்கூடாது" என கூறியிருந்தார்.
விஜயை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, மாணவ மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியதாக வேல்முருகனுக்கு கண்டனம் எழுந்துள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழகமும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவிக்க இணை செயலாளர் தாஹீரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்திக்கொண்டு, தி.மு.க.வில் உறுப்பினர் அட்டை வாங்கிக்கொண்டு, தேர்தலில் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு, தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வேல்முருகன், தமிழகப் பெண்களையும் பெண் குழந்தைகளையும் அவமரியாதையாகப் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?" என கூறியுள்ளார்.
அரசியல் தாண்டி பொதுவெளியிலும் வேல்முருகனின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறனும் வேல்முருகனை கடுமையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தன் மகள் வயதுடைய மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறார். அதை இப்படி கொச்சையாக விமர்சிக்கும் நீங்கள் தமிழர்தானா? மனிதர்தானா? பெண்களை இந்தளவிற்கு தவறாக பேசுவது அநாகரீகத்தின் உச்சம். விஜய்யின் அரசியல் வருகை உங்களுக்கு கடும் பீதியை தந்துள்ளதா வேல்முருகன்?" என கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் உள்ளிட்ட பலரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகனை கடுமையாக கண்டித்து வருகின்றனர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
-
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட். ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! சிஎம் விஜய் அதிரடி! -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!











Click it and Unblock the Notifications