மூச்சே விடல.. கருணாநிதியின் 100 திட்டங்கள்! படபடவென வெடித்து தள்ளிய வேல்முருகன் - ஸ்டாலின் ரியாக்ஷன்
சென்னை: புளியந்தோப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டார்கள். இதில் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "கருணாநிதி தமிழ் சமுகத்துக்கு ஆற்றிய எண்ணற்ற பணிகளில் குறிப்பிட்ட நூறு பணிகளை மட்டும் ஓரிரு வார்த்தைகளில் கூறி 10 நிமிடங்களில் என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். கல்வி, பெண் கல்வி, சமத்துவம், சமூக நீதி, கலை, பண்பாடு, சினிமா, எழுத்து, நாடகம், கவிதை என்று எல்லா துறைகளில் ஆளுமை செலுத்திய மாபெரும் மகத்தான தலைவர் கருணாநிதி தான்.
ஏழை மக்கள் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் கருணாநிதி. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டிற்கு தந்தவர் கருணாநிதி. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரியை நிறுவியவர் கருணாநிதி.
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை நிறுவியவர் கருணாநிதி அவர்கள். பெரியார் பல்கலைக்கழகம் நிறுவியவர் கருணாநிதி. முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியர் கருணாநிதி. சொத்தில் பெண்களுக்கு உரிமை உள்ளது என்று சட்டம் இயற்றியவர் கருணாநிதி. அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீட்டை இந்தியாவில் முதலில் ஏற்படுத்தி தந்தவர் கருணாநிதி.
ஏழை பெண்களுக்கு திருமண உதவி திட்டம் தந்தது கருணாநிதி. முதல்முறையாக விதவைப் பெண்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் அளிக்க வழிவகை செய்தவர் கருணாநிதி. விதவை பெண்கள் மறுமண நிதியுதவி திட்டம் தந்தது கருணாநிதி. கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி திட்டம் தந்தது கருணாநிதி.
பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அனைத்தும் தந்தது கருணாநிதி. உள்ளாட்சி பகுதிகளில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை தந்து சரிநிகர் ஆணுக்கு சமமாக கோலோச்சுவதற்கான செங்கோலை தந்தவர் கருணாநிதி. முதல்முறையாக விதவைப் பெண்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தவர் கருணாநிதி.
முதல் உலகத் தமிழ் மாநாடு நடத்தியவர் கருணாநிதி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் கருணாநிதி. உலகத் தமிழர்களுக்கு உதவ தமிழ் மொழி பல்கலைக்கழகம் தந்தவர் கருணாநிதி. 133 அடியில் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை தந்தவர் கருணாநிதி. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை விடுமுறை தினமாக அறிவித்தவர் கருணாநிதி.

உருது பேசும் இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டோரில் தமிழ் இஸ்லாமியர்களையும் சேர்த்து தந்தவர் கருணாநிதி. இஸ்லாமியர்களுக்கான 3.5% இடஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி. உருது அகாடமி தந்தவர் கருணாநிதி. சிறுபான்மை பொருளாதார வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தித் தந்தவர் கருணாநிதி.
பசுமைப் புரட்சித் திட்டத்தை தமிழ்நாட்டில் முன்னோடியாக நடத்திக் காட்டியவர் கருணாநிதி. கால்நடை பாதுகாப்பு திட்டத்தை கொடுத்தவர் கருணாநிதி. விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்தவர் கருணாநிதி. விவசாயக் கடன் ரூ.7 ஆயிரம் கோடியை பதவியேற்ற முதல் நாள் ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்தவர் கருணாநிதி.
முதல்முறை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கருணாநிதி. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலையை உயர்த்தியவர் கருணாநிதி. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலையை உயர்த்தியவர் கருணாநிதி. மாவட்டம்தோறும் உழவர் சந்தையை கொண்டு வந்தவர் கருணாநிதி.
கரும்பு டன்னுக்கு கொள்முதல் விலையை உயர்த்தியவர் கருணாநிதி. 181 கோடி செலவி காவிரி குண்டாறு நதிநீர் இணைப்பை செயல்படுத்தியவர் கருணாநிதி. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி - கரும்பேணி - நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கருணாநிதி. முதல் விவசாய கல்லூரியை உருவாக்கித் தந்தவர் கருணாநிதி.

நெல் கொள்முதலுக்கு ஊக்க விலை தர வேண்டும் என்று தந்தவர் கருணாநிதி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை தந்தவர் கருணாநிதி. நில விற்பனை வரைமுறை சட்டத்தை அமைத்தவர் கருணாநிதி. அரசு ஊழியர்களுக்கு குடும்ப நல திட்டம் தந்தவர் கருணாநிதி. அரசு ஊழியர்களுக்கு மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் கருணாநிதி.
ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தவர் கருணாநிதி. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தவர் கருணாநிதி. இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தவர் கருணாநிதி. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தவர் கருணாநிதி. நெய்வேலியில் இரண்டாம் அனல் மின் நிலையத்தை தந்தவர் கருணாநிதி.
தூத்துக்குடியில் பெட்ரோ கெமிக்கலை கொண்டு வந்தவர் கருணாநிதி. சிட்கோ, சிப்காட் போன்ற நிறுவனங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. பூம்புகார் கப்பல் நிறுவனத்தை தந்தவர் கருணாநிதி. சென்னையில் வெளிநாடுகளுக்கு நிகரான டைட்டல் பார்க்கை உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதி.
கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தவர் கருணாநிதி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு எம்பிசி என்று இடஒதுக்கீட்டை தந்தவர் கருணாநிதி. தாழ்த்தப்பட்டோருக்கு 15% இடஒதுக்கீடு, பழங்குடியினருக்கு 1%, அருந்ததியினருக்கு 3% இடஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி.
கை ரிக்சாவை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்சா தந்தது கருணாநிதி. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்தவர் கருணாநிதி. இலவச கான்கிரிட் வீடுகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க திட்டம் வகுத்தவர் கருணாநிதி. மீனவர்களுக்கு இலவச வீடு, சமத்துவபுரம் கொடுத்தவர் கருணாநிதி. தொழிற்சாலைகளுக்கு வெளிப்படையாக கொள்கை அமைத்தவர் கருணாநிதி.
தொழிற்முறை கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீட்டை தந்தவர் கருணாநிதி. கிராமப்புறங்களில் மினி பஸ் சேவை, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், இலவச எரிவாயு உருளை, இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி, காலல்துறை அணையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து அமைச்சக பணியாளர்களை ஆக்கியவர் கருணாநிதி.
போக்குவரத்து துறையை உருவாக்கினார், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் துறையை உருவாக்கியவர் கருணாநிதி. அரசியலமைப்பின் பிசி 31%, எஸ்சி 18% ஆக உயர்த்தியவர், மே 1 சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை, ரூ.104 கோடியில் சென்னையில் பொது மருத்துவமனையை கட்டித் தந்தவர் கருணாநிதி.
ரூ.1500 கோடியில் 350 துணை மின்நிலையங்கள், வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி புதிய மருத்துவக் கல்லூரிகள், ஒரு கிலோ அரசி திட்டம், பொதுவிநியோக திட்டத்தில் சமையல் எண்ணெய், வீட்டுப் பொருட்கள், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம், சமச்சீர் கல்வி, காமராஜர் பிறந்தநாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தவர் கருணாநிதி.
இலவச பஸ் பாஸ், பொது நுழைவுத் தேர்வு, 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம், முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு ரூ.20000 முதல் 4 ஆண்டுக்கு ரூ.80000 வரை பொறியியல் கல்லூரி கட்டணம், மாவட்டத் தலைநகரங்களில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், இலவச மருத்துவக் காப்பீடு, அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டம் தந்தவர் கருணாநிதி.
அண்ணா நூற்றாண்டு நூலகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் தந்தவர் கருணாநிதி. நான் சொல்லியது ஒரு பானை சோற்றில் ஒரு சோறு பதம் என்பதுபோல நூறு நூறு சாதனைகள் செய்தவர் கருணாநிதி தமிழ்நாட்டில் செய்த சாதனைகள் என்ன? திராவிட இயக்கம், திராவிட மாடல் தமிழ்நாட்டில் செய்த சாதனைகள் என்ன? என்ற கேள்விக்கு ஒரே பதிலை சொல்லி இருக்கிறேன்." என்றார்.
-
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications