விஜய் சிஎம் ஆவது ஓகே.. ஆனா இதையும் கவனிக்க வேண்டும்.. பி.ஆர்.சுந்தர் சொன்ன முக்கிய விஷயம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை காட்ட முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது. ஆனாலும் கட்சி துவங்கி வெறும் 2 வருடத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன்ஸ் டிரேடர் பி.ஆர். சுந்தர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு முக்கியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். இவர் விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரார் ஆவார், தவெகவின் வெற்றி வெறும் ரசிகர்களின் ஆதரவால் மட்டும் வரவில்லை என்பதைத் சுட்டிக்காட்டியுள்ளார்.

TVK வெற்றியின் உண்மையான அடித்தளம்
பி.ஆர்.சுந்தர் தனது ட்வீட்டில், "இது ரசிகர்களின் கூட்டத்தால் மட்டும் வந்த வெற்றி இல்லை. நன்கு படித்த இளைஞர்கள், பொது வாக்காளர்கள் மற்றும் நாம் தமிழர் வாக்குகள் அனைத்தும் சேர்த்துதான் இந்த வெற்றி தவெக-விற்கு கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்-யின் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் தவெக கட்சிக்கும் இருக்கும், ஆனால் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் இணைந்ததால் தான் இந்த மாபெரும் வெற்றி சாத்தியமானது என்பதை தெரிவித்துள்ளார். இதன் மூலம் தவெகவிற்கு பரவலாக அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என பி.ஆர்.சுந்தர் விளக்குகிறார்.
பி.ஆர். சுந்தர் இதே ட்வீட்டில் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் கொடுத்துள்ளார் "ரசிகர்கள் ஆதரவு எப்போதுமே இருக்கும். ஆனால் மற்றவர்களின் ஆதரவு, எதிர்காலத்தில் இவர்களுடைய ஆட்சி நன்றாக இருந்தால் மட்டுமே தொடரும்" என்று அவர் கூறியுள்ளார்.
அதாவது, இப்போது பெற்றுள்ள ஆதரவை நீடிக்க வேண்டுமானால், வரும் ஆட்சியில் நல்ல நிர்வாகம், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மற்றும் திறமையான செயல்பாடுகள் அவசியம் என்பதை பி.ஆர்.சுந்தர் கூறுகிறார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு சுமார் 8 முதல் 9 சதவீதம் பங்களிக்கும் மிக முக்கியமான மாநிலமாகும். நாட்டின் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இத்தகைய நிலையில் ஆட்சி மாற்றம் நடந்தாலும் பொருளாதார வளர்ச்சி கொள்கையில் கட்டாயம் நிலையான போக்கு வேண்டும்.
மேலும் விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில், 2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவது மிக முக்கிய இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய பெரும் முதலீடும், வேலைவாய்ப்பு, வர்த்தகத்தையும் தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும். இதற்கான திட்டமிடலும் மிகப்பெரிய அளவில் தேவை.












Click it and Unblock the Notifications