சொல்லி அடித்த கில்லி.. லைவ் நிகழ்ச்சியிலேயே குத்தாட்டம் போட்ட ‘ஆக்சிஸ் மை இந்தியா’ பிரதீப் குப்தா!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக முன்னிலை பெற்ற நிலையில் தனது கணிப்பு பலித்த மகிழ்ச்சியில் ஆக்சிஸ் - மை இந்தியா நிறுவனரான தேர்தல் நிபுணர் பிரதீப் குப்தா நேரலையில் குத்தாட்டம் போட்டு வெற்றியைக் கொண்டாடியுள்ளார். ஆக்சிஸ் மை இந்தியா, 4 மாநிலங்களில் கிட்டத்தட்ட துல்லியமாக தேர்தல் முடிவுகளைக் கணித்துள்ளது.
விஜய் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவார் என்று கணித்தபோது பலரும் நம்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்களை வெல்லும் என்று Axis My India கணித்திருந்தது. இந்நிலையில் இந்த எக்சிட் போல் முடிவு தற்போது உண்மையாகியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களை தன்வசப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான ஊடகங்களும், கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே முடிவுகள் அமையும் என்றும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிகபட்சமாக 25 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தன. ஆனால், தவெக 98 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்றும் என்ற ஆக்சிஸ் மை இந்தியாவின் அதிரடி கணிப்பு இப்போது வாக்கு எண்ணிக்கை நிலவரங்களில் அப்படியே பிரதிபலித்துள்ளது.
ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இடங்கள் குறித்த கணிப்பில் சிறு மாற்றங்கள் இருந்தாலும், விஜய்யின் விஸ்வரூபத்தை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்ததன் மூலம் 'ஆக்சிஸ் மை இந்தியா தனது நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம், தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு எதிர்பாராத வெற்றியைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யக்கூடும் என்று ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கருத்துக் கணிப்பு கணித்திருந்தது. தவெக 98 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணிப்பு
தவெக: 98 - 120 இடங்கள்
திமுக: 92 - 110 இடங்கள்
அதிமுக பாஜக கூட்டணி: 22 - 23 இடங்கள்
இன்றைய ரிசல்ட்
தவெக: 107 இடங்கள்
திமுக: 74 இடங்கள்
அதிமுக - பாஜக கூட்டணி: 53 இடங்கள்
இதேபோல, ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணிப்புகளை வெளியிட்ட 4 மாநிலங்களிலுமே அதன் கணிப்பு கிட்டத்தட்ட துல்லியமாகப் பொருந்தி இருக்கிறது.
இந்நிலையில் தமது நிறுவனம் கணித்தபடியே தவெக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முன்னிலை பெறுவதைக் கண்ட ஆக்சிஸ் - மை இந்தியா நிறுவனரான தேர்தல் நிபுணர் பிரதீப் குப்தா, தனது மகிழ்ச்சியை அடக்க முடியாமல் நேரலையிலேயே வெளிப்படுத்தினார்.
வழக்கமாக தேர்தல் முடிவுகள் தனது கணிப்பிற்கு நெருக்கமாக வரும்போது உணர்ச்சிவசப்படும் பிரதீப் குப்தா, இந்த முறை ஒரு படி மேலே சென்று தொலைக்காட்சி நேரலை விவாதத்தின் போதே எழுந்து குத்தாட்டம் போட்டுள்ளார். பிரதீப் குப்தாவின் இந்த நடன வீடியோவை தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானார். அப்போது ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், பாஜக தலைமையிலான NDA கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கணித்திருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான போது அந்தக் கணிப்பு தவறாகப் போனது.
பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து, கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தனது நிறுவனத்தின் கணிப்பு இவ்வளவு பெரிய அளவில் தோல்வியடைந்ததை நேரலையில் ஒப்புக்கொண்ட பிரதீப் குப்தா, செய்தி ஊடகத்தில் விவாதத்தின் போதே விம்மி விம்மி அழுதது இந்திய அளவில் வைரலானது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications