விஜய்க்கு இவ்வளவுதான் மவுசா.. சலிப்பு தட்டிடுச்சே.. அப்செட் ஆன ரங்கசாமி.. அப்போ நோ கூட்டணி?!
புதுச்சேரி: புதுச்சேரியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் முதல்வர் என். ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசியல் தலைகள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக முக்கியமான பார்முலா ஒன்று அவர் சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் + 100 இடங்களில் தவெக போட்டியிடும் காங்கிரஸ் இந்த கூட்டணியில் இருக்கும். கேரளாவில் 10 இடங்கள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். புதுச்சேரியில் 5- 10 தொகுதிகள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். இதற்காக விஜய் தீவிரமாக காங்கிரசின் டெல்லி தலைகள் உடன் பேசி வருகிறாராம்.
பிரவீன் சக்ரவர்த்தி உடன் சந்திப்பு
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தினார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கேரளாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி, புதுச்சேரியில் என். ஆர் காங்கிரஸ் + காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற திட்டத்தை விஜய் முன்னிறுத்தி.. அதை பற்றி ராகுல் காந்தியிடம் பேசுங்கள் என்று சொல்லி இருக்கிறாராம்.
ஆனால் புதுச்சேரியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் முதல்வர் என். ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசியல் தலைகள் தெரிவிக்கின்றன.
விஜய் தவெக கூட்டணி உருவாகாது?
சமீபத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் எதிர்பார்த்ததைவிட மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம். முன்னதாக ரங்கசாமியுடன் வலுவான கூட்டணி அமைக்க TVK தலைவர் விஜய் விரும்பினார். ஆனால் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு பின் இந்த நிலைமை அடியோடு மாற்றிவிட்டது.
முந்தைய நாள் நடந்த நிகழ்ச்சிக்கு, ஏற்பாட்டாளர்கள் சுமார் 5,000 பேருக்கு அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், திரண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. கூட்டம் ஆரம்பித்த பிறகும் பல இருக்கைகள் காலியாகவே இருந்தன. இதனால், விஜய் தனது உரையைத் தொடங்குவதற்கு முன், கூடுதல் மக்கள் சேரும்வரை காத்திருக்க நேர்ந்தது. விஜய் கிட்டத்தட்ட 1 மணி நேரம் தாமதமாகவே பேசினார். வழக்கம் போல கூட்டத்தை சேர்த்து அதன்பின் பேசலாம் என்று நினைத்தார்.
ஆனால் அதெல்லாம் முடியாது.. உங்கள் தலைவரை பேசிவிட்டு செல்ல சொல்லுங்கள் என்று போலீசார் கூறியதால் குறைந்த கூட்டம் முன் விஜய் பேச வேண்டியதாகிவிட்டது. இது சங்கடமான சூழலை உருவாக்கியதுடன், புதுச்சேரியில் TVK-ன் அடிப்படை பலம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தவெக விஜய் மவுசு குறைவு?
குறைந்த மக்கள் கூட்டம், ரங்கசாமியை தனது கூட்டணித் திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தவெக கட்சிக்கு நினைத்த அளவிற்கு செல்வாக்கு இல்லை. அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி உள்ளது என்று ரங்கசாமி யோசிக்க தொடங்கிவிட்டாராம். ஆரம்பத்தில் ரங்கசாமி காட்டிய ஆர்வம் இப்போது குறைந்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் விஜய் மட்டும் வந்தால் ஏற்க முடியாது.. காங்கிரசும் உடன் வரணும் .. அதற்கும் வாய்ப்பு இல்லை என்று ரங்கசாமி கருதுகிறாராம். குறைவான வருகையால், TVK-வுடனான கூட்டணி எதிர்பார்த்த ஆதரவைத் தராது என அவர் கருதுகிறார்.
இந்தக் கூட்டம் நடக்கும் வரை, புதுச்சேரி தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் ரங்கசாமி பின்வாங்கி பழைய படி பாஜக கூட்டணியிலேயே அவர் தொடர வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
விஜய் தரப்பு ரங்கசாமியை மீண்டும் சமாதானப்படுத்த முயற்சிக்குமா அல்லது அவர் இல்லாமல் வெறுமனே காங்கிரஸ் - தவெக என்ற கூட்டணியை உருவாக்க பார்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications