TVK Vijay: தவெக கூட்டத்தின் உள்ளே நுழைந்ததும் விசில் அடித்த தொண்டர்கள்! காதை மூடிய விஜய்!
சென்னை: மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் நுழைந்ததும் நிர்வாகிகள் விசில் அடித்து வரவேற்றனர். அதிக சப்தத்தால் திக்குமுக்காடிய விஜய், சிறிது நேரம் சிரித்தபடியே காதுகளை மூடிக் கொண்டார்.
மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு விஜய் வந்த போது நிர்வாகிகள் எல்லாம் விசில் அடித்து வரவேற்றனர். அப்போது விசில் அடித்தபடியே டிவிகே டிவிகே என முழங்கினர்.

இந்த சப்தத்தால் திக்குமுக்காடிய விஜய், சிரித்தபடியே காதுகளை பொத்திக் கொண்டார். இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட, மாநில அளவிலான செயல்வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
3 ஆயிரம் நிர்வாகிகள்
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கியூ ஆர் கோடு வசதியுடன் 3 ஆயிரம் நிர்வாகிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 37 நாட்களுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் ஜனநாயகன், சிபிஐ விசாரணை குறித்து பேசுவார் என்கிறார்கள். அது போல் கூட்டணி இல்லை, தனித்து போட்டி என்பதையும் அவர் அறிவிப்பார் என்கிறார்கள்.
தவெகவுக்கு விசில் சின்னம்
தவெகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது. இந்த சின்னம் கிடைத்தவுடன் தவெக நிர்வாகிகள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
விசில் அடித்த புஸ்ஸி ஆனந்த்
பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் விசில் கொடுத்தனர். புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் விசில் அடித்தனர். மேலும் அண்மையில் தவெக நிர்வாகி திருமணத்தில் புதுமணத் தம்பதி விசில் அடித்து பிரச்சாரம் செய்தனர்.
இப்படியாத இந்த விசிலை தவெகவினர் தற்போதே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தவெகவின் நிறங்களான மஞ்சள், சிகப்பு ஆகிய நிறத்தில் விசில் செய்ய ஆர்டர் கொடுத்துவிட்டனர்.
கழுத்தில் விசில்
இன்று ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தவர்களும் கழுத்தில் விசிலை மாட்டிக் கொண்டு வந்தனர். அவர்கள் விஜய் வந்ததும் விசில் அடித்த சப்தத்தால் அரங்கமே அதிர்ந்தது. விஜய்க்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது போல் சிரித்தபடியே காதுகளை மூடிக் கொண்டார்.
சினிமாவில் மட்டும் ஹீரோ
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் பேசுகையில், விஜய் சினிமாவில் மட்டும் ஹீரோ கிடையாது. அரசியலிலும் அவர் ஹீரோ. விரைவில் அவர் தமிழக முதல்வராக போகிறார். மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
செல்பி
விஜய்யுடன் இணைந்த பிறகு நான் எங்கு சென்றாலும் என்னுடன் செல்பி எடுக்கிறார்கள். பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் செல்பி எடுக்கிறார்கள். திமுககாரர், அதிமுககாரர் என யார் வீட்டில் கேட்டாலும் விஜய்க்குதான் ஓட்டு என்கிறார்கள்.
விஜய் வருகை
விஜய்யின் அரசியல் வருகையால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆடி போய் இருக்கிறார்கள். விசில் சின்னம் நமக்கு கிடைத்துவிட்டது. ஆனால் அதை கவனமாக கையாள வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர் காதில் அடித்து விடாதீர்கள், அப்பறம் ஓட்டு போய்விடும். அது போல் பேருந்து நிலையத்தில் விசில் அடித்தால் பெரியவர் அய்யோ பேருந்து கிளம்புகிறது என நினைத்து தடுமாறிவிடுவார் என காமெடியாக செங்கோட்டையன் பேசியிருந்தார்.
செங்கோட்டையன் அட்வைஸ்
தவெகவில் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் அவரது பேச்சு, விஜய்யை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்ற உறுதி... இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது அவர் மகிழ்ச்சியாக தவெகவில் பயணிக்கிறார் என தெரிகிறது.
-
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
இனி யாருக்காக அரசியல் செய்யணும்.. கலக்கத்தில் சீமான்.. லைம்லைட்டை இழந்து நிற்கும் நாம் தமிழர்? -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications