யூடர்ன் போட்டு.. டேபிளை உடைச்சு! பழைய திட்டங்களுக்கு ’மரு’ வைத்த விஜய்! சர்க்கார் டயலாக் பொய்யா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை நகரில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது வரவிருக்கும் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ள சில முக்கிய திட்டங்களை அவர் அறிவித்தார். இதில் தாலிக்குத் தங்கம், கேஸ்சிலிண்டர், திருமண சீர் திட்டம், அரசு போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் போன்றவை இடம்பெற்றுள்ளன. சர்க்கார் படத்தில் இலவசத்துக்கு எதிராக கருத்து சொன்ன விஜய், தற்போது திமுக அதிமுக திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக ஏற்பாடு செய்திருந்தது. இதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு பெண்களை மையமாகக் கொண்ட பல நலத்திட்டங்களை அறிவித்தார்.
கட்சியின் வரவிருக்கும் தேர்தல் அறிக்கையில் இந்த திட்டங்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் "மதிப்புமிகு மகளிர் திட்டம்" என்ற பெயரில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி தொகை 60 வயது வரையிலான பெண்களுக்கு வழங்கப்படும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு இந்த திட்டத்தில் விலக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக விஜய்
மேலும் "அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்" என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நலனுக்காக தனி இலாகா அமைக்கப்படும், திருமண நலத்திட்டமாக "அண்ணன் சீர்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் ஆகும் அனைத்து பெண்களுக்கும் 8 கிராம் தங்கமும், தரமான பட்டுப்புடவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக திட்டங்கள்
இதற்குப் பிறகு "தாய்மாமன் சீர்" என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும், பெண்களின் சுயசார்பு மற்றும் பயண வசதியை கருத்தில் கொண்டு அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என்றும், கல்வி துறையை வலுப்படுத்த "காமராஜர் கல்வி உறுதி திட்டம்" அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வரை பொருளாதார உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை
இதற்காக "காமராஜர் கல்வி நிறுவனம்" உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க "ஜீரோ டாலரன்ஸ் ஃபார் உமன்" என்ற கொள்கை கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த "ராணி வேலுநாச்சியார் படை" உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 500 குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க "அஞ்சலையம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றம்" அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேபி வெல்கம் கிட்
பாஸ்ட் ட்ராக் நீதிமன்றங்கள் மூலம் பெண்களுக்கு எதிரான வழக்குகள் விரைவாக தீர்ப்பு பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பெண்களின் தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் "சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்" அறிவிக்கப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்களில் உள்ள பெண்கள் எம்.எஸ்.எம்.இ துறையில் பதிவு செய்தால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக "பேபி வெல்கம் கிட்" வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தவெக தேர்தல் அறிக்கை
இந்த திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக அதிமுக திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தற்போது விஜய் அறிவித்திருக்கும் மகளிர் உரிமைத் தொகை, தாலிக்குத் தங்கம், பேபி கிட், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் உள்ள அல்லது அதிமுக திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. லேசாக எண்ணிக்கையை உயர்த்தி அல்லது பெயர் மாற்றம் செய்து விஜய் புதிய திட்டங்கள் போல் அறிவித்துள்ளார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்!












Click it and Unblock the Notifications