தவெக ராஜ்மோகனுக்கு முக்கிய பொறுப்பு.. தேசிய செய்தி தொடர்பாளராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியின் பொறுப்பாளராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு, வழக்கறிஞர் சத்தியகுமார், தேன்மொழி ஆகியோர் தேசிய செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

முதல் முறையாக தேர்தல் களத்தைச் சந்திக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளது. அக்கட்சியில் மாநிலம் முழுக்க பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தவெக ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக வெற்றிக் கழகத்தில் அணிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communicatiom) அணியில் பின்வரும் முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
பொறுப்பாளர் (In charge):
1. திரு. A. ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர்
ஒருங்கிணைப்பாளர்கள்:
2. திரு. 5.ரமேஷ், செங்கல்பட்டு
3. திருமதி. J.கேத்ரின் பாண்டியன், திருநெல்வேலி
தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:
4. திரு. G.பெலிக்ஸ் ஜெரால்டு, சென்னை
5. திரு வழக்கறிஞர் M.சத்தியகுமார், சென்னை
6. திருமதி. M.K.தேன்மொழி பிரசன்னா, மதுரை
மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:
7. திரு. முகில் வீரப்பன் (எ) மு. சு.சிவகுமார், புதுக்கோட்டை
8. திரு. அமலன் சாம்ராஜ் பிரபாகர், சென்னை
9. திரு. ந.சி.தி அனந்தஜித் மகியா, திருவள்ளூர்
10. திரு. மு. ஞான செல்வின் இன்பராஜ், செங்கல்பட்டு
11. திரு. முகமது இப்ராஹிம், சென்னை
12. திரு. ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், சென்னை
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள், கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து, எனது உத்தரவு எது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
இனி யாருக்காக அரசியல் செய்யணும்.. கலக்கத்தில் சீமான்.. லைம்லைட்டை இழந்து நிற்கும் நாம் தமிழர்? -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications