Election Exclusive: விஜய் போட்டியிடும் தொகுதி.. யூடர்ன் போட்ட திமுக தலைமை.. திட்டத்தை மாற்றிய தவெக!
சென்னை: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியை கடைசி நேரத்தில் அறிவிக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய் போட்டியிடும் தொகுதியை முன்கூட்டியே வெளியிட்டால், அங்கு திமுக மற்றும் அதிமுக தங்களின் பணிகளை தொடங்கிவிடும் என்பதால், வேட்பு மனுவையும் கூட கடைசி வாரத்தில் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் அதிக கட்சிகள் கூட்டணியில் இணைந்து வரும் சூழலில், தவெக தனித்து களமிறங்க தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும், அது கைகூடவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் என்று விஜய் பேசி இருந்தார்.

விஜய்யின் கிங் மேக்கர் திட்டம்
அதேபோல் தவெக 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தாமல், கிங் மேக்கர் ஆவதற்கான பணிகளை மட்டுமே செய்து வருவதாக ஏற்கனவே ஒன் இந்தியா தமிழில் சொல்லி இருந்தோம். அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியை போல் 180 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, ஒன்றில் கூட வெல்லாமல் போய்விடக் கூடாது என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார்.
நகரங்களில் வரவேற்பு
அதுமட்டுமல்லாமல் நகரங்களில் தவெகவுக்கு அதிக வரவேற்பு இருந்தாலும், கிராமங்களில் கட்டமைப்பு இல்லாமல் இருப்பது விஜய்க்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதேபோல் வடமாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் விஜய்க்கு அதிக வரவேற்பு உள்ளதாக என்று அக்கட்சியினர் கருதுகின்றனர். இதனால் அதிகளவில் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
திமுகவின் திடீர் யூடர்ன்
அதற்கேற்ப வியூகங்களும் அமைக்கப்பட்டு விஜய் தரப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் விஜய்க்கு எதிராக திமுக வேட்பாளரை நேரடியாக களமிறக்க முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. விஜய் போட்டியிடும் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தால், அந்த தொகுதியை திமுக பெற்றுக் கொண்டு வேறு தொகுதியை கொடுக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கு நடந்தது என்ன?
ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவதை அறிந்து செந்தில் பாலாஜி நேரடியாக திமுக வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இதனால் பாஜக எவ்வளவோ முயன்ற போதும், கோவையில் அண்ணாமலையை வெற்றிபெற வைக்க முடியவில்லை. இதே பாணியை விஜய்க்கும் பின்பற்றவும் திமுக தயாராக உள்ளது.
மாற்றுத் திட்டத்தில் தவெக?
இதனால் விஜய் போட்டியிடும் தொகுதி உட்பட சில தொகுதிகளுக்கு கடைசி நேரத்தில் வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விஜயகாந்த், கமல்ஹாசனை போல் திமுக மற்றும் அதிமுக சின்னத்தை எதிர்த்து விஜய் தரப்பு போட்டியிட விரும்பவில்லை. இதனால் விஜய்யின் வேட்பு மனுவையும் கடைசி வாரத்தில் செய்ய தவெக தலைமை முடிவு எடுத்திருக்கிறது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு











Click it and Unblock the Notifications