இரண்டரை வருடம் முதல்வர் பதவி வேண்டும்.. எடப்பாடியிடம் கண்டிப்பாக சொன்ன தவெக! உருவாகாத அதிமுக கூட்டணி
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக - தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்தை:
"த.வெ.க. தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும், கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் விரும்புகின்றனர். அதற்கேற்பத்தான், விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அவரிடம் இவர்கள் இருவரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதாவது, விஜய் தனித்து போட்டியிட வேண்டும் என திமுகவின் திட்டம். அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் சிதறவேண்டும், திமுக கூட்டணி உடைந்து விடக்கூடாது என்பதால் தான் விஜய் தனித்துப்போட்டியிட திமுக திட்டமிடுகிறது. அதனைத்தான் புஸ்ஸியும் ஜானும் செயல்படுத்துகின்றனர். ஆனால், த.வெ.க.வில் இணைந்து தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் பொறுப்பைப் பெற்றுள்ள ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வை பெரிய அளவில் வெற்றிபெற திட்டமிடுகிறார்.
அவரை பொறுத்தவரை திமுக ஆட்சியை வீழ்த்தி, திமுக தலைமையை பழி வாங்கவேண்டும் என்பது அதீத ஆசை. அது, நிறைவேறவேண்டுமெனில், விஜய் தனித்துப் போட்டியிடக்கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே ஆதவ்வின் திட்டம். இதற்கு, புஸ்சியும் ஜானும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். இதனை விஜய்க்கு வெளிப்படுத்தி, எதார்த்த அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு உணர்த்த, நாம் மட்டும் போதாது என திட்டமிட்டு பிரசாந்த் கிஷோரை விஜய்யுடன் சந்திக்க வைத்திருக்கிறார் ஆதவ். இவரை பொருத்தவரையில், அதிமுக-தவெக கூட்டணி உருவாக விஜய் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு, அதிமுகவுக்கும் விஜய்யுக்குமான தூதராக பி.கே. இயங்குவார் என்ற அளவில் இந்த சந்திப்பு நடந்தது" என்று ஆதவ் அர்ஜுனா தரப்பிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை:
சமீபத்தில் விஜயை சந்தித்த பிரஷாந்த் கிஷோர், திமுகவை வீழ்த்துவதுதான் உங்கள் லட்சியமெனில் அதிமுகவுடன் கூட்டணி வையுங்கள். தனித்துப் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை உங்கள் கட்சி வாங்கலாமே தவிர, வெற்றிக்கான உத்தரவாதம் கிடையாது. வெற்றியில்லாத எவ்வளவு வாக்குகள் வாங்கினாலும் அதில் பலனில்லை. ஒருவேளை, நீங்கள் தனித்து போட்டியிட்டு, திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டால் அடுத்த 5 வருடத்தில் உங்கள் கட்சியை சின்னாபின்னமாக்கி விடுவார்கள் திமுகவினர்' என்றெல்லாம் யோசனை தெரிவித்திருக்கிறார் பி.கே. இந்த நிலையில்தன அதிமுக - தவெக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பேட்டி:
ஆனால் தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications