“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பேன்”.. தவெக விஜய் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சபதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியை அவரது தொகுதியில் தோற்கடிப்பேன் என விஜய் ஆதரவு பெற்ற எடப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அங்கு தவெக போட்டியிடவில்லை. இதையடுத்து தவெக தலைவர் விஜய் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு தெரிவித்தார்.

எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாகவும், அவர் கருப்பு ஆடு என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்து இருந்தார். எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிடாத சூழ்நிலை உருவானது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

TVK Vijay Backed Independent Premkumar Vows to Defeat Edappadi Palaniswami

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த அருண்குமார், வேட்பு மனு பரிசீலனையின் போது, திடீரென காணாமல் போனார். அவரது வேட்பு மனுவில் சில தகவல்கள் முறைப்படி இல்லாததால் தள்ளுபடி ஆனது. மாற்று வேட்பாளராக இருந்த அவரது மனைவி நித்யா வேட்பு மனுவும் ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. எடப்பாடி சட்டசபை தொகுதி தவிர 233 தொகுதிகளில் தவெக, விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக டி.வி. சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், நேற்று தவெக தலைவர் விஜய்யை சந்தித்துள்ளார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் டிவி சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் பிரேம்குமாருக்கு தமிழக வெற்றி கழகம் ஆதரவு தந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து இன்று காலை முதலே தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எடப்பாடியில் தமக்கு ஆதரவாக டிவி சின்னத்தில் வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாக சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

TVK Edappadi tamil nadu assembly election 2026

தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் கூறுகையில், "நான் ஏற்கனவே விஜய் ரசிகராக உள்ளேன். மேலும் விஜய் ரசிகர் மன்றத்தில் கிளைச் செயலாளராகவும் இருந்துள்ளேன். இந்த நிலையில் தான் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் மனு தள்ளுபடி ஆனதால், இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களை தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டேன். அதன் அடிப்படையில் விஜய் அவர்கள் எடப்பாடி தொகுதிக்கு எனக்கு ஆதரவு அளித்துள்ளார்.

நான் இதன் மூலம் எடப்பாடி அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் தோற்கடிப்பேன். இன்று காலை முதலே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே என்னுடைய டிவி சின்னத்தை எளிதாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று வெற்றி பெறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+