இது லிஸ்டுலேயே இல்லையே.. திடீரென கனிமொழிக்கு போனை போட்டு பேசிய விஜய்.. திரும்பி பார்த்த திமுக!
சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. திமுக எம்பி கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறி உள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, தனது 58-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
போன் மூலம் தொடர்பு கொண்டு.. உங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுங்கள், நீங்கள் விரும்பியது எல்லாம் கைகூட வாழ்த்துக்கள் என்று விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தனது பிறந்த நாளில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி கனிமொழி மரியாதை செலுத்தினார்.

விஜய் கனிமொழி
விஜய் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்பவர். ஸ்டாலின் அங்கிள் என்று சொல்ல கூடியவர். அதேபோல் ஸ்டாலின் சார் என்று கிண்டல் தொனியில் விமர்சனம் செய்பவர். இப்படி எல்லாம் செய்துவிட்டு.. கனிமொழிக்கு போன் மூலம் அவர் வாழ்த்து சொன்னது விவாதங்களை, கேள்விகளை எழுப்பி உள்ளது.
கனிமொழி தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தும் நேரத்தில் இந்த போன் கால் வந்துள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, தனது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையை நோக்கி நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது.
பல ஆண்டுகளாக தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், மாநில அளவிலான தேர்தல் அரசியலுக்குள் நுழையும் முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, 2026 தேர்தலுக்குப் பிறகு கனிமொழி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து, டெல்லி அரசியல் களத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின் எம்பி பதவியை ராஜினாமா செய்வார். எம்பியாக தமிழகத்தின் குரலை தேசிய அளவில் வலுவாக ஒலிக்கச் செய்த அவர், இனி மாநில அரசியலில் கவனம் செலுத்தும் திமுக தலைமை எடுத்த ஒரு வியூக முடிவாக இது கருதப்படுகிறது.
தமிழக அரசியலுக்கு திரும்பும் கனிமொழி
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தமிழக அரசியலில் மேலும் நேரடியான பங்களிப்பை வழங்க கனிமொழி முனைந்துள்ளார். அவர் வெற்றிபெற்றால், மாநில அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அனுபவம், அரசியல் முதிர்ச்சி, மற்றும் வலுவான தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவை மாநில நிர்வாகத்திற்குப் பேருதவியாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் பெண்கள் இருந்தாலும்.. வலுவான முகம் போன்ற பெண் அமைச்சர்கள் இல்லை. அதை சரிகட்டவே கனிமொழியை களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
கனிமொழி குழு
ஏற்கனவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கனிமொழிக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற பெயரில் நடத்தப்பட்டு கனிமொழி மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கு இதுவே காரணம் என்கிறார்கள் .
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications