விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ்
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார் திமுகவின் இனிகோ இருதயராஜ். இந்த முறை இவருக்கு டார்கெட் வெறும் வெற்றி மட்டுமல்ல, 'பவர்ஃபுல்' விஜய்யின் தவெக-வை வீழ்த்துவதுதான்.
தமிழக அரசியல் களம் இப்போது '2026' மோடிற்கு முழுமையாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக, திருச்சி மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள தொகுதிகளின் நிலவரம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதுதான் இப்போது ஹாட் டாப்பிக்.

திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜின் 'மினிஸ்டர்' கனவு!
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை விஜய் அறிவித்து உள்ளார். இதில் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தி நகர் தொகுதியில் புஸ்சி ஆனந்தும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவும், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனும் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் வழங்கியுள்ளார் விஜய்.
விஜய் களமிறங்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார் திமுகவின் இனிகோ இருதயராஜ். இந்த முறை இவருக்கு டார்கெட் வெறும் வெற்றி மட்டுமல்ல, 'பவர்ஃபுல்' விஜய்யின் தவெக-வை வீழ்த்துவதுதான்.
இனிகோ அமைச்சர் போஸ்ட்?
அரசியல் வட்டாரத்தில் அடிபடும் பலமான பேச்சு இதுதான்: "ஒருவேளை திருச்சி கிழக்கில் விஜயை வீழ்த்தி இனிகோ வெற்றி பெற்றால், அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதி." திமுக அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் தலைமைக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில், விஜயை வீழ்த்தும் 'ஜெய்ன்ட் கில்லர்' பட்டத்தோடு வரும் இனிகோவுக்கு சிவப்பு விளக்கு கார் உறுதி என்கிறார்கள் அறிவாலய உடன்பிறப்புகள்.
மூன்றாவது அமைச்சரா? 'திருச்சி' லாஜிக் இடிக்குதே!
ஆனாலும், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே திருச்சி மாவட்டத்திலிருந்து கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் என இரண்டு சீனியர் அமைச்சர்கள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்கள். "ஒரே மாவட்டத்திற்கு மூன்று அமைச்சர்களா?" என்பதுதான் இப்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.
வரலாறு என்ன?
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் (தொகுதி எண்: 141) கடந்த காலத் தேர்தல் முடிவுகள் குறித்த முக்கிய விவரங்கள்,
2021 சட்டமன்றத் தேர்தல்:
வெற்றி: இனிகோ இருதயராஜ் (திமுக) - 94,302 வாக்குகள்.
இரண்டாமிடம்: வெல்லமண்டி நடராஜன் (அதிமுக) - 40,505 வாக்குகள்.
வெற்றி வித்தியாசம்: 53,797 வாக்குகள். (திமுக இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து கைப்பற்றியது).
2016 சட்டமன்றத் தேர்தல்:
வெற்றி: வெல்லமண்டி நடராஜன் (அதிமுக) - 79,938 வாக்குகள்.
இரண்டாமிடம்: ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங்கிரஸ்) - 58,044 வாக்குகள்.
வெற்றி வித்தியாசம்: 21,894 வாக்குகள்.
2011 சட்டமன்றத் தேர்தல்:
வெற்றி: ஆர். மனோகரன் (அதிமுக) - 83,046 வாக்குகள்.
இரண்டாமிடம்: அன்பில் பெரியசாமி (திமுக) - 62,420 வாக்குகள்.
வெற்றி வித்தியாசம்: 20,626 வாக்குகள். (2008 தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் நடந்த முதல் தேர்தல் இது)
மண்டல வாரியாகப் பார்த்தால், திருச்சிக்கு ஏற்கனவே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது அமைச்சருக்கான வாய்ப்பு என்பது தர்க்கரீதியாகச் சவாலானதுதான். இருப்பினும், 'சிறுபான்மை முகம்' என்கிற கார்டு.. விஜயை வீழ்த்தியவர் என்ற கார்டை வைத்தால் இந்த லாஜிக் உடையவும் வாய்ப்புண்டு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பெரம்பூர்: தவெக-வுக்கு 'நோ என்ட்ரி'?
அப்படியே சென்னை பக்கம் திரும்பினால், பெரம்பூர் தொகுதி நிலவரம் தவெக-வுக்கு அவ்வளவு சாதகமாகத் தெரியவில்லை. வடசென்னை கோட்டையான பெரம்பூரில் திமுகவின் வாக்கு வங்கி மிகவும் பலமாக இருக்கிறது.
தற்போதைய கள நிலவரப்படி, பெரம்பூர் தொகுதியில் தவெக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றே கணிக்கப்படுகிறது. களத்தில் இருக்கும் தற்போதைய திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் (RDS) முகம் இப்போது பிரகாசமாக இருக்கிறது. அங்கே விஜய் போய்ட்டியிடுவது ஏன் என்ற கேள்வியே உள்ளது. பெரம்பூர் என்பது பாரம்பரியமாக திராவிடக் கட்சிகளின் கோட்டை. இங்கே அதிமுக தனது சின்னமான இரட்டையிலையை களமிறக்காமல், கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கியிருப்பது பல புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் சிம்பிள்: விஜய்யின் வெற்றியைத் தடுப்பது. அதிமுகவின் வாக்கு வங்கி விஜய்யின் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதே சமயம் ஒருவேளை விஜய் வெற்றி பெற்றால் அது அதிமுகவுக்குப் பெரிய பின்னடைவாகத் தெரியும் என்பதாலும், இந்தத் தொகுதியை பாமகவுக்கு 'கிஃப்ட்' கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டது எடப்பாடியார் தரப்பு. "நாம தோத்தா அதிமுக தோத்ததா ஆகாது, ஆனா விஜய் ஜெயிச்சா அது நமக்கு ரிஸ்க்" என்பதுதான் ரத்தத்தின் ரத்தங்கள் சிந்தனை.
அதாவது திமுக அதிமுக அங்கே நேரடியாக மோதினால் வாக்குகள் பிரியும்.. இதை பயன்படுத்தி விஜய். வெற்றிபெற்றுவிடுவார். அதுவே பாமக நிறுத்தப்பட்டால் அதிமுகவினர் கிரவுண்டில் அப்படியே திமுக பக்கம் செல்வார்கள். பலர் திமுக பக்கம் வாக்களிப்பார்கள். இதனால் பாமக டம்மியாக இருக்கும். ஏனென்றால் பெரம்பூரில் பாமக களத்திலேயே இல்லை. இதனால் மொத்தமாக வாக்குகள் திமுக பக்கம் செல்லும். விஜய்க்கு சிக்கல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vijay: சைக்கிள் ஓட்டியபோது ரசிகர் எறிந்த பூக்கள்! வெடிகுண்டுனு நெனச்சி கேரவனுக்குள் ஓடினாரா விஜய்? -
விஜய்க்கு ஓட்டு போடனும்.. முதியவர் சொல்லியும் காங்கிரஸ்க்கு குத்திய அதிகாரிகள்? காரைக்குடியில் மறியல் -
அதைத் தாண்டி யாரும் வரக்கூடாது.. திருப்பூர் கூட்டத்தில் திடீரென டென்ஷனான விஜய் -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
ரோடு ஷோவை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பிய விஜய்.. தவெக தொண்டர்கள் கடும் ஏமாற்றம் -
ரசிகர் கொடுத்த சங்கீதா போட்டோ, பார்த்ததும் விஜய் செய்த செயல்.. இது விஜயகாந்துக்காக நடந்த மாற்றமா? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
விஜய்யை பார்க்க வீட்டில் சொல்லாம கொள்ளாம வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 5 பவுன் செயின் திருட்டு! -
தொண்டர்கள் கையை மிதிக்கும் பவுன்சர்கள்.. உணர்ச்சிவசப்பட்டுட்டாங்ளாம்! புது விளக்கம் கொடுத்த சிடிஆர்! -
தவெகவினரை தெறித்து ஓடவிட்ட திலகபாமா! பெரம்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்.. தேர்தல் சலசலப்பு! -
மீண்டும் மீண்டுமா.. பிரசார வேனில் தொங்கிய தவெக தொண்டர்.. பவுன்சர் செய்த காரியம் -
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே












Click it and Unblock the Notifications