பாஜக கூட்டணிக்கு ரெடியான விஜய்? தவெக லிஸ்டில் ஒரு இஸ்லாமியர் பெயர் கூட இல்லையா? உண்மை என்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் நியமிக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்கள் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக விளக்கங்களும் வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்து சொதப்பலான முடிவுகளை எடுத்து வருகிறது. கட்சி ரீதியாக பல தவறுகளை, மோசமான முடிவுகளை எடுத்து வருகிறது. முக்கியமாக கரூர் விவாகரத்திற்கு பின் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு, ஆதவ் அர்ஜுனா சர்ச்சை போஸ்ட், விஜய் வீட்டிற்கு உள்ளேயே இருப்பது, மற்ற நிர்வாகிகள் மாயம் என்று கட்சி மொத்தமாக முடங்கி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, கட்சியின் பணிகளை சரி செய்ய கீழ்காணும் புதிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த குழுவும் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.
1. N.ஆனந்த் பொதுச்செயலாளர்
2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
3. Dr. K.G. அருண்ராஜ் ExBUS கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்
4. CTIL நிர்மல் குமார் இணைப் பொதுச்செயலாளர்
5. A.ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்
6.விஜயலட்சுமி துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் மாவட்டம்
7. A.ராஜசேகர் தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்
8. M.அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர் சென்னை மாவட்டம்
9. M.சிவக்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் அரியலூர் மாவட்டம்
10. A.பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்
11. R.விஜய் சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
12. M.சிவன் மாவட்டக் கழகச் செயலாளர் தருமபுரி மேற்கு மாவட்டம்
13.. M.பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்டம்
14. V.சம்பத்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்
15. M.சுகுமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாகப்பட்டிணம் மாவட்டம்
16. S.R.தங்கப்பாண்டி மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்
17. K.அப்புனு (எ) வேல்முருகன் மாவட்டக் கழகச் செயலாளர் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்
18. B. ராஜ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டம்
19. J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர் புதுக்கோட்டை மத்திய மாவட்டம்
20. A.விஜய் அன்பன் கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
21. R. பரணிபாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
22. V.P.மதியழகன் மாவட்டக் கழகச் செயலாளர் கரூர் மேற்கு மாவட்டம்
23. N.சதிஷ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்டம்
24. K. விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை தெற்கு மாவட்டம்
25. M.வெங்கடேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு கிழக்கு மாவட்டம்
26. S.ராஜகோபால் மாவட்டக் கழகச் செயலாளர் திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
27. S. பாலசுப்பிரமணியன் கழக உறுப்பினர் தூத்துக்குடி
28. டாக்டர். N. மரிய வில்சன் கழக உறுப்பினர் சென்னை மாவட்டம்
சர்ச்சையில் தவெக
ஆனால் தவெகவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த குழுவும் இப்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதன்படி குழுவில் பெரும்பாலும் ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆதரவு ஆட்களே உள்ளனர். கட்சிக்கு உள்ளேயே ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தவர்கள், கட்சியில் பொறுப்பில் இல்லாமல் ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது.
மாறாக கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவான நபர்கள் மொத்தமாக ஓரம்கட்டப்பட்டு உள்ளனர். இது போக கட்சிக்குள் இஸ்லாமியர்கள் யாரும் இந்த குழுவில் இடம்பெறவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் பர்வேஸ் என்ற இஸ்லாமிய நிர்வாகி குழுவில் இடம்பெற்று உள்ளார். பாஜக கூட்டணிக்கு விஜய் போவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி ஆதவ் அர்ஜுனாவிற்கு நெருக்கமான பலருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications