சட்டசபையில் ஸ்டாலின் செய்தது வன்ம அரசியல்.. முதல்முறையாக மௌனம் கலைத்த விஜய்.. கடும் விமர்சனம்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளார். வேதனையில் அமைதி காத்த போது எங்களுக்கு எதிராக அரசியல் செய்தார்கள் என்று விஜய் தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் பேசி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசுகையில், எங்களை அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு.. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் எங்களை விமர்சனம் செய்யும் விதமாக மோசமாக, அரசியல் செய்யும் விதமாக பேசி உள்ளார்.

நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனைகளிலும், வலியிலும் இவ்வளவு நாட்கள் இருந்தோம். நாம் அமைதி காத்த நேரத்தில் நம்மை பற்றி அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் அதே தமிழக அரசை உச்ச நீதிமன்றம் நறுக்கு நறுக்கு என்று குட்டி உள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பாக வாதம் செய்த அறிவார்த்த வழக்கறிஞர்கள் கூனிக்குறுகி நின்றார்கள். இதை நாடே பார்த்தது.
அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்தது ஏன் என்று குட்டு வைத்து.. அதை கலைத்து உள்ளனர். மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு எதுவும் இல்லாமல்.. அரசியல் ஆட்டம் ஆடி வருகிறார். அதிகார மமதையில் ஆடி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில்.. உலகில் எந்த தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுகளை ஸ்டாலின் எங்களுக்கு விதித்தார்.
மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டது. ஸ்டாலின் சட்டசபையில் சொன்னது எல்லாம் வடிகட்டிய பொய் என்பது தெரிந்துவிட்டது. முதல்வர் சொன்னது எதிலும் உண்மை இல்லை. இது எல்லாம் நடந்தது.. எதற்காக நடந்தது.. என்பதை மக்கள் மறக்கவில்லை.. ஸ்டாலின்தான் மறந்துவிட்டார். இந்த திமுக ஆட்சியை இழக்கும். இந்த திமுக மீண்டும் அறிவாலயத்தில் ஒளிந்துகொள்ளும் நிலை ஏற்படும்.
2026ல் மக்கள் ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் பாடம் எடுப்பார்கள். கரூர் துயர சம்பவத்தால் நாம் அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல் பரப்பப்பட்டது. ஸ்டாலின் நமக்கு எதிராக வன்ம அரசியல் செய்கிறார். ஆனால் இந்த வன்ம அரசியல் செய்யும் திமுக வீட்டிற்கு செல்லும். திமுக.. மக்கள் முடிவை ஏற்கிறோம் என்று கூறி அறிக்கை வெளியிடும் நிலை ஏற்படும். மீண்டும் சொல்கிறேன்.. இந்த தேர்தலில் போட்டி இரண்டு பேருக்கு இடையில்தான். ஒன்று தவெக.. இன்னொன்று திமுக. அதில் மாற்றம் இல்லை, என்று விஜய் பேசி உள்ளார்.
விஜய் பொதுக்குழு தீர்மானம்
தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
விஜய் தலைமையில்தான் தவெக தேர்தலை சந்திக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இன்று நடந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications