Vijay: விஜய் 6 மணிக்கு மேல் ஷூட்டிங் கூட போகமாட்டார்.. காரணம் என்ன தெரியுமா? போட்டு உடைத்த பிஸ்மி
சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் (Vijay) 6 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக பிஸ்மி பேட்டி ஒன்றில் விளக்கமாக பேசியிருக்கிறார். விஜய் ஷூட்டிங் கூட 6 மணிக்கு மேல் இருக்காது எனவும் அதற்கான காரணம் என்னவென்பது குறித்தும் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் தனது சினிமா வாழ்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகன் வரும் பொங்கலுக்கு வர உள்ளது.

விஜய் அரசியல் பயணம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் நாளை மறுநாள் திருச்சியில் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார். ஏற்கனவே விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு மாநில மாநாடுகளை விஜய்யின் தவெக நடத்திய நிலையில், இனி தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு இருக்கும் என்று கூறினார். இதன்படி தமிழக முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்திற்கு விஜய் ஆயத்தமாகியிருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. விஜய் மீது தனிப்பட்ட முறையிலும் கடுமையான தாக்குதல்கள் நடக்கின்றன. குறிப்பாக விஜய் 6 மணிக்கு மேல் வெளியில் செல்ல மாட்டார். அவரால் குடிக்காமல் இருக்க முடியாது என்று இணையத்தில் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக திருச்சி சூர்யா அளித்த பேட்டி ஒன்றில், விஜயை மாலை 6 மணிக்கு மேல் யாராவது பார்த்தது உண்டா?
6 மணிக்கு மேல் வெளியே வர மாட்டார்
மாநாடு நடத்தியபோதும் கூட 6 மணிக்கு முடித்துவிட்டு போய்விட்டார். 6 மணிக்கு மேல் அவர் யாரையும் சந்திக்க மாட்டார். ஷூட்டிங்கில் கூட 6 மணி ஆகிவிட்டால் கேரவனுக்கு போய்விடுவார். அதற்கு ஒரு காரணம் உண்டு என பேசி இருந்தார். விஜய் மீதான இந்த விமர்சனங்கள் குறித்து பிஸ்மி பேட்டி ஒன்றில் விளக்கமாக கூறியுள்ளார். The Whistle யூடியூப் சேனலுக்கு பிஸ்மி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
திமுகவை சேர்ந்த இணைய கூலிப்படைகள், முக்கியமாக பார்த்தீர்கள் என்றால் 6 மணிக்கு மேல நிதானம் இல்லாமல் தினமும் குடிப்பவர்களே கூட விஜய் மீது இப்படி ஒரு விமர்சனம் வைக்கிறார்கள்.
விஜயகாந்த் மீது வைத்த அதே பார்முலா
"விஜய் ஒரு மோடா குடிகாரன்.. 6 மணிக்கு மேல அவர் குடிக்காவிட்டால் கையெல்லாம் நடுங்கிடும்" என்று சொல்கிறார்கள். இது என்ன ஸ்ட்ராடஜி தெரியுமா? விஜயகாந்தை ஒரு குடிகாரனாக சித்தரித்து அவரை காலி பண்ணினார்கள். கிட்டத்தட்ட அதே டெம்ப்ளேட் விஷயத்தை விஜய் மீது அப்ளை பண்ணப் பார்க்கிறார்கள்.
நான் சொல்கிறேன்... விஜய்யை முதல் படம் முதல் எனக்கு பெர்சனலாகவே தெரியும். இவர்கள் சொல்கிற மாதிரியான குடிப்பழக்கம் விஜய்க்கு கிடையாது. ஒருவேளை சோஷியல் டிரிங்கராக ஏதாவது ஒரு பார்ட்டியில் வேண்டுமென்றால் குடிப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், இவங்க சொல்ற மாதிரி "6 மணி ஆனால் குடித்துவிடுவார், 6.30 மணி ஆனால் கை நடுங்கும்" அப்படியெல்லாம் கிடையாது. அப்படிப்பட்ட ஆளே விஜய் கிடையாது.
9 மணிக்குள் தூங்கி விடுவார்
விஜய்யை பற்றி ரொம்ப க்ளோசாக அறிந்தவன் என்ற முறையில் நான் சொல்கிறேன். விஜய்யின் லைஃப்ஸ்டைல் என்னவென்றால், இரவு 7 மணி, 7.30 மணிக்கெல்லாம் அவர் டின்னரை முடித்து விடுவார். சீக்கிரமாகவே டின்னரை முடித்துவிடுவார். அதிகபட்சம் பார்த்தீர்கள் என்றால் 8.30 அல்லது 9 மணிக்கெல்லாம் விஜய் தூங்கிவிடுவார். காலையில் 5 மணி, 5.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். இதுதான் அவரது லைஃப்ஸ்டைல். இது தான் அவரது இளமை ரகசியும் கூட..
இது தான் அவருடைய வாழ்க்கை முறை
அதனால்தான் அவரது சூட்டிங் டேட் கொடுக்கும் போது கூட காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைத்தான் டைம் கொடுப்பார். ஏதாவது நைட் எஃபெக்ட் இருந்தால் 9 மணி வரை சூட்டிங் போகும். இல்லையென்றால் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால்தான் 6 மணிக்கு மேல் நடிப்பார்.
மற்றபடி ஆபிஸ் போயிட்டு வருகிற மாதிரி 9 மணி முதல் 6 மணி வரைதான் நடிப்பார். இது அவருடைய வாழ்க்கை முறை. இது எதுவுமே தெரியாமல் "விஜய் ஒரு குடிகாரன்.. 6 மணிக்கு மேல அவருக்கு வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்" என்று சொல்வது எல்லாம் கேவலமான குற்றச்சாட்டு.
-
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications