“என்னருமை தம்பி, தங்கைகளே..” நாளை முக்கியமான நாள்.. மாணவர்களை வாழ்த்திய தவெக தலைவர் விஜய்!
சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், 2023 - 2024ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை கடந்த டிசம்பர் மதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 7,72,000 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும், 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வையும், 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையும் எழுதுகின்றனர்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதியுடன் பொதுத் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதியான இன்றுடன் பொதுத் தேர்வுகள் முடிவடைந்துள்ளன.
மார்ச் 26 ஆம் தேதியான நாளை முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 28 ஆயிரம் தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுத உள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என விஜய் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications