2 கட்டங்களாக மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார் விஜய்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு? வெளியானது அறிவிப்பு!
சென்னை: அதிக மதிப்பெண் பெற்ற 10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் விழாவை இரு கட்டங்களாக நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வரும் அவர், சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதோடு, அவர்களை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய்: அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் விஜய்.
கல்வி விருது விழா என்ற பெயரில் விஜய், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் அழைத்து நாள் முழுவதும் தானே தன் கைப்பட உதவித்தொகையை வழங்கினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
மாணவர்களுக்கு உதவித்தொகை: இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்பு முதல் முறையாக மாணவ மாணவிகளை சந்திக்கவுள்ளார் விஜய். இந்த முறையும் சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து உதவித்தொகை வழங்க இருக்கிறார். மேலும் அந்த மாணவர்களோடு பெற்றோர் இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் இணைத்து உதவித்தொகை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி ஏற்பட்டது. சரியாக மாணவர்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஒரு மாணவி வருத்தம் தெரிவித்தார். அதேபோல் இந்த ஆண்டு நடந்துவிடக் கூடாது என்பதால், மாவட்ட வாரியாக மாணவர்களை தேர்வு செய்ய இணையதள லிங்க் அனுப்பப்பட்டுள்ளது.
2 கட்டங்களாக நடைபெறுகிறது: மேலும் கடந்த முறை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளில் விருது நிகழ்ச்சி நடத்தியதால், கடும் கூட்டம் ஏற்பட்டதோடு, இரவு வரை நிகழ்ச்சி தொடர்ந்தது. இதனால் மிகவும் சோர்ந்து போனார் விஜய். மேலும், மாணவர்களும் காலை முதல் இரவு வரை காத்திருந்தனர்.
இதனால், இந்த முறை பரிசளிப்பு விழாவை 2 கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜூன் மாதத்தில் 28 ஆம் தேதியும், ஜூலை 3ஆம் தேதியும் என 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாவட்ட வாரியாக தனித் தனியாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு எப்போது?: முதல் கட்டமாக ஜூன் 28 ஆம் தேதி அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
அதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஜூலை 3 ஆம் தேதி அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
விஜய் பரிசு வழங்கும் விழா நடக்கும் இடம்: சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் நடைபெறும் பாராட்டு விழாவில், விஜய், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளதாக தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்












Click it and Unblock the Notifications