ரேஷன் திட்ட வரலாறு.. இதுகூட விஜய்க்கு தெரியவில்லை.. டிகேஎஸ் இளங்கோவன் அட்டாக்!
சென்னை: புதுச்சேரியில் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் விஜய் விமர்சித்துள்ள நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். விஜய்க்கு சொன்ன நேரத்திற்கு முன்பாக புதுச்சேரிக்கு சென்றதன் மூலமாக, கரூர் சம்பவத்திற்கு தாமும் ஒரு காரணம் என்பதை விஜய் உணர்ந்துள்ளதாகவே கருதுவதாக தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டம் 11 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், 15 நிமிடங்களுக்கு முன்பாக விஜய்யின் பிரச்சார வாகனம் உப்பளம் மைதானத்திற்கு வந்தது. இதன்பின் விஜய் பேசுகையில், புதுச்சேரி அரசை பார்த்தாவது தமிழ்நாட்டில் திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி மக்கள் திமுக மட்டும் நம்பக் கூடாது.. அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றிவிடுவார்கள் என்று விமர்சித்தார். புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதுதொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரியில் கூட்டம் நடத்த 15 நாட்களாக போராடினார்கள்.
இவர்கள் கொடுத்த இடத்தையெல்லாம் மறுத்துவிட்டு, 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்று ஒரு இடத்தை ஒதுக்கினார்கள். இன்னொரு வேடிக்கையான நிகழ்வு என்னவென்றால், 5 ஆயிரம் பேருக்கு மேல் வராதீர்கள் என்று விஜய் கூறி இருக்கிறார். 5 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால், கூட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்துவிடுவோம் என்று புதுச்சேரி அரசு மிரட்டியதாக தோன்றுகிறது.
அதேபோல் 11 மணிக்கு வருவதாக கூறிவிட்டு, விஜய் 10.45 மணிக்கு விஜய் வந்துவிட்டார். நேரம் தவறாமல் விஜய் புதுச்சேரிக்கு வந்துள்ளார். இதன் மூலமாக கரூர் சம்பவத்திற்கு தாமதமாக வந்ததன் மூலமாக மக்கள் தண்ணீர் இல்லாமல் மயக்கம் அடைந்து, உயிரிழந்திருக்கின்றனர் என்பதை விஜய் உணர்ந்திருப்பதையே தோன்றுகிறது.
காலை 8.45 மணிக்கு நாமக்கல் வருவதாக கூறிவிட்டு, அந்த நேரத்தில் சென்னையில் இருந்த உத்தம தலைவர் விஜய். அதேபோல் விஜய் இரு மாநிலங்களுக்கு முதல்வராக நினைக்கிறார். ஒரே நேரத்தில் 2 மாநிலங்களுக்கு முதல்வராக முடியாது. இரு மாநிலங்களுக்கு ஆளுநர் வேண்டுமானால் ஆகலாம். அவருக்கு இன்னும் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
அதேபோல் ரேஷன் கடை இல்லை என்று சொல்லும் விஜய், எதற்காக என்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பாராட்டுகிறார்? ரேஷன் திட்ட வரலாறு கூட விஜய்க்கு தெரியவில்லை. விஜய்க்கு மக்கள் பற்றி கவலையில்லை.. தாம் முதல்வராக வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.. எடப்பாடி, பாஜகவுக்கு முதல்வராகும் ஆசை வரக் கூடாது என்று தூக்கிபோட்டு செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications