TVK Vijay Mahabalipuram Christmas celebration live : மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கணும்.. விஜய் பேச்சு
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வீட்டை விட்டு புறப்பட்டார்.
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

சமத்துவக் கிருஸ்துமஸ் விழா என்ற பெயரில் நடைபெறும் இந்த விழாவில் தவெக தலைவரான நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் 1500 பேர் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்ச்சியில், QR கோட் அனுமதிச்சீட்டு வைத்துள்ள நபர்களை மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை கட்சியினர் தவிர்த்த நிலையில், கிறஸ்துமஸ் விழாவை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள். இன்று நடைபெறும் விழாவில் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளார்கள்.

விழா நடைபெறும் நட்சத்திர ஓட்டலுக்கு தவெக தலைவர் விஜய் காரில் புறப்பட்டு சென்றுள்ளார். மகாபலிபுரத்தில் விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு செல்ல விஜய் ரசிகர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். ஊடகங்கள் பல வரிசை கட்டி ஓட்டல் முன்பும் காத்திருக்கின்றன. எனினும் இந்த நிகழ்வில் பங்கேற்க பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மகாபலிபுரத்தில் ஆச்சரியம் அளிக்கும் விதிமாக வழக்கத்தைவிட அமைதியான சூழலே காணப்படுகிறது.

-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக!















Click it and Unblock the Notifications