சங்கீதாவுக்கு வீட்டில் உரிமை உள்ளது.. தவெகவினர் ஆபாச அவதூறு டூ மச்.. விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். விஜய்க்கு நடிகையுடன் கள்ள தொடர்பு இருப்பதால் அவரின் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தன்னை வீட்டிற்குள் அனுமதில்லை என சங்கீதா நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவத்தில் விஜய் மற்றும் தவெக தொண்டர்களுக்கு மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

விஜய் சங்கீதா பஞ்சாயத்து
தவெக முதல் மாநாட்டிலேயே விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தார். ஆனால் விஜய்யின் பேச்சைக் கேட்டு ஒரு கட்சி கூட அவர்களுடன் கூட்டணியில் இணையவில்லை. தவெக தனி மரமாகத்தான் தேர்தலை சந்திக்கவுள்ளது. கூட்டணி தான் சொதப்பியது என்றால் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏராளமான பஞ்சாயத்துகள் நிலவி வருகின்றன.
விஜய்க்கு பிரபல நடிகையுடன் கள்ள காதல் இருப்பதாகவும், அதை அவர் கைவிட மறுப்பதாகவும் கூறி மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த அதிர்ச்சிக்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. விஜய் தன்னை வீட்டிற்குள்ளேயே அனுமதில்லை என சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மாதர் சங்கம் கண்டனம்
இதுகுறித்து மாதர் சங்கம் பொதுச்செயலாளர் ராதிகா கூறுகையில், "விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விவாகரத்து கோருவதால் என்னை வீட்டில் அனுமதிக்க மறுக்கிறார்கள் என கூறியுள்ளார். விவகாரத்து கோரியிருந்தாலும் விஜய் வசிக்கும் நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு சங்கீதாவுக்கு முழு உரிமை உள்ளது. இது சட்டத்தால் உறுதிபடுத்தப்பட்ட ஒன்று.
இது விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தான். விஜய் நடிகராக இருந்தால் இதை அவரின் தனிப்பட்ட வாழ்க்கையாகவே விட்டுவிடலாம். இன்றைக்கு அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி அரசியலில் உள்ளார். தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருப்பேன், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று சொல்லி அவர் அரசியலில் இயங்கி கொண்டிருக்கிறார்.
தவெகவினர் ஆபாச அவதூறு
வீட்டில் உள்ள தன் இணையருக்கு உள்ளே அனுமதில்லை என்பது சரியான அணுகுமுறை இல்லை. இவர் எப்படி மாற்றத்தை கொடுக்க முடியும். இளைஞர்களுக்கு எப்படி வழிகாட்டியாக செயல்பட முடியும். விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தாக்கல் செய்து ஒரு வாரம் தான் ஆகிறது. இதற்கு சங்கீதா மீது இணையதளங்களில் தொடர்ச்சியாக ஏராளமான அவதூறு பரப்புகிறார்கள். தவெக தொண்டர்கள் தான் இந்த ஆபாச அவதூறுகளை பரப்புகிறார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, இது என்னுடைய குடும்ப விஷயம். சமூகவலைதளங்களில் மனைவியை பற்றி மோசமாக பதிவிடக்கூடாது என விஜய் சொல்லவில்லை. இது தமிழ்நாட்டிற்கு மோசமான முன் உதாரணமாக உள்ளது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிமன்றம் வழிகாட்டுமுறை வழங்கும் வரை சங்கீதா அந்த வீட்டில் இருப்பதற்கு முழு உரிமை இருக்கிறது" என்றார்.
-
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன












Click it and Unblock the Notifications