Salem: நான் வர்றேன்.. எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் பிரசாரத்தை ஆரம்பிக்கும் விஜய்? அதிமுக கனவு பலிக்குமா?
சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தனது சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்து இருந்தார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் மீண்டும் விஜய் எப்போது பிரசாரத்தை தொடங்குவார் என எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு பிரசாரத்தை நிறுத்தி வைத்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதை அடுத்து கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து இருந்த தவெக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் மாமல்லபுரம் அழைத்து சந்தித்த பிறகு, மீண்டும் கட்சி பணிகளை தொடங்கியது.

விஜய் பிரசாரம் எப்போது?
சென்னையில் கடந்த 5 ஆம் தேதி தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக அட்டாக் செய்தார். திமுக - தவெக இடையே தான் வரும் தேர்தலில் கூட்டணி எனவும் விஜய் அழுத்தமாக பதிவிட்டு இருந்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெகவிற்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஆதரவாக பேசின.
சேலத்தில் இருந்து மீண்டும் சுற்றுப்பயணம்
இதனால், தனித்து போட்டியிடும் தனது முடிவில் இருந்து மனம் மாறி, அதிமுக கூட்டணிக்கு செல்வாரா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. ஆனால், சிறப்பு பொதுக்குழுவில் இந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிருந்தார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், விஜய் தனது பிரசாரத்தை எப்போது தொடங்குவார் என்று தவெகவினர் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில்தான் விஜய், விரைவில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அருகே உள்ள சேலத்தில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாகவும், இதற்கு விஜய் ஓகே சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, விஜய் பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை தவெகவினர் செய்து வருவதாகவும் தவெக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
விஜய் சம்மதம் தெரிவித்தார்
இது தொடர்பாக சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூறுகையில், "சென்னையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் போது சேலத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். இதனை விஜயும் ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தார். ஆனால் எப்போது பிரசாரம் தொடங்கும் என்பதை கட்சி தலைமையே முடிவு செய்யும்.
கட்சி தலைமையே அறிவித்தால் ஏற்பாடுகளை உடனே செய்ய தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்? அதற்கான அனுமதி பெறுவது போன்ற ஆலோசனைகளை நிர்வாகிகள் வழங்குவார்கள். மேலிட அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்றார்.
அதிமுகவை சீண்டி பேசுவாரா?
சேலம் என்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் ஆகும். எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விஜய் தனித்து போட்டி என சிறப்பு பொதுக்குழுவில் அறிவித்த பிறகு அதிமுகவும் விஜயை விமர்சிக்க தொடங்கியுள்ளது.
எனினும், விஜய் தனது பிரசாரத்தில் அதிமுகவை பெரிய அளவில் சீண்டியது இல்லை. எனினும், தற்போதைய அரசியல் சூழலில், விஜயின் அணுகுமுறையில் மாற்றம் இருக்குமா? இல்லை.. அதிமுகவிற்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் வகையில் அவரது பேச்சு இருக்குமா? என்பது சேலம் பிரசாரத்தில் ஓரளவு தெரிந்து விடும் என்று தவெகவினர் எதிர்பார்க்கிறார்கள். விஜய் மீண்டும் பிரசாரம் தொடங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தவெகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஜனநாயகன் படம் ஹைதராபாத் ஸ்டுடியோவில் கசிந்ததா.. எடிட்டர் சங்கம் அளித்த விளக்கம் -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள் -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
விஜய் அட்டைக்கத்தி.. காற்றடித்தால் கதை முடிஞ்சுது.. திருச்சி கிழக்கில் உதயநிதி தக் -
ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.. குமரியில் விஜய் பேச்சு -
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!












Click it and Unblock the Notifications