கைமீறி போயிடுச்சு.. விஜய்க்கு போன அட்வைஸ்.. மறுப்பு அறிக்கைக்கு ரெடியாகும் தவெக.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டு பேச்சில் பாசிசம் - பாயாசம் என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பான விமர்சனங்கள் நடிகர் விஜய்க்கு சென்றுள்ளது.. விஜய் இது தொடர்பாக விரைவில் மறுப்பு அறிக்கை வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயின் வீட்டில் நடந்த ஆலோசனையின் முடிவில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், ஒரு குழந்தை முன்பாக பாம்பை கண்டாலும் அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த குழந்தை. அதே போலத்தான் அரசியல் என்பது பாம்பு அந்த பாம்பை பயமே இல்லாமல் கையில் எடுத்து விளையாட வந்திருக்கிறேன். பாம்பு தான் அரசியல். அத கையில பிடிச்சு விளையாட போறது தான் உங்க விஜய்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொன்னதும்.. ஒரு கட்சி.. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது.

தவெக அறிவிக்கும் போதே கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும். நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமூடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமூடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்.

யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள், என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு: இதில் நடிகர் விஜயின் பாசிசம் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் பதிவாகி வருகின்றன. பின்வரும் விமர்சனங்கள் இதில் வைக்கப்படுகின்றன. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டு பேச்சில் பாசிசம் - பாயாசம் என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பான விமர்சனங்கள் நடிகர் விஜய்க்கு சென்றுள்ளது.. விஜய் இது தொடர்பாக விரைவில் மறுப்பு அறிக்கை வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயின் வீட்டின் நடந்த ஆலோசனையின் முடிவில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் பல விஷயங்களை பேசி இருக்கலாம்.. திமுகவை விமர்சிக்கலாம். ஆனால் பாசிசத்திற்கு எதிரான எந்த ஒரு கட்சியையும்.. பாயசம் என்று சொல்லி கிண்டல் செய்ய கூடாது. விஜயின் அரசியல் முதிர்ச்சியின்மையை இது காட்டுகிறது. பாசிசத்தை எதிர்ப்பவர்களை பாயசம் என்று சொல்லி கிண்டல் செய்வது சரியாக இருக்காது. அவர் பலரின் போராட்டங்களை மலிவு படுத்துகிறார். பல மாநிலங்களில் மத மோதல் இருக்கிறது. பல மாநிலங்களில் புல்டோசர் அரசியல் இருக்கிறது. அப்படி இருக்க இதை எல்லாம் வைத்து கிண்டலாக பேசுவது விமர்சனம் ஆகி உள்ளது.

ஜாதி, மதம், மொழித் திணிப்பு மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்புகள் தொடர்பான உண்மையான போராட்டங்களை அவர் நிராகரித்திருப்பது போல பேசி இருப்பது தவறு என்று விமர்சனம் வைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+