TVK Vijay: காங்கிரஸ் பாணியில் மதிமுக.. விஜய் பெயரை வைத்து பலே பேரம்.. அதிர்ந்த திமுக
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் அரசியல் விஜய் வருகை இந்த தேர்தலை சுவாரஸ்யப்படுத்தியுள்ளது. விஜய்யை பாராட்டி பேசியே திமுக, அதிமுக இரண்டு கூட்டணிகளிலும் அரசியல் கட்சிகள் தங்களின் பேரத்தை அதிகரிக்கும் வியூகங்களால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது [TVK Vijay].
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

விஜய் பெயரை வைத்து பேரம்
நடிகர் விஜய் தவெக கட்சியின் முதல் மாநாட்டில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு. கூட்டணி ஆட்சி என்கிற திரியை கிள்ளி போட்டார். தற்போதுவரை விஜய் கட்சியுடன் யாரும் கூட்டணி சேரவில்லை. அதேநேரத்தில் தாங்கள் இருக்கிற கூட்டணியில் விஜய் பெயரை சொல்லி பேரத்தை அதிகரிக்கும் வியூகத்தை கடைபிடிக்கிறார்கள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விஜயை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என பாராட்டினார். அவர் தவெகவுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இருப்பினும் விஜய் 100 கிமீ புயல். அவர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து தங்களின் டிமாண்ட்களை அதிகரிக்கிறார் தினகரன்.
காங்கிரஸ் பிளான்
நீண்ட காலமாக கூட்டணியில் இருந்த திமுக - காங்கிரஸ் உறவிலும் தற்போது சிக்கல்கள் நிலவி வருகின்றன. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் விஜய்யை பாராட்டி, திமுகவை விமர்சித்து வருகிறார்கள். சில நிர்வாகிகள் திமுகவுக்கு பதிலாக தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதையும் அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்கள். மறுபக்கம் செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தவெகவுடன் பச்சை கொடி காட்டி திமுகவுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து, கூட்டணியில் தங்களுக்கு கூடுதல் இடம் பெற காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இதே பாணியை தற்போது மதிமுகவும் கையில் எடுத்துள்ளது. விஜய் தன் வசமுள்ள இளைஞர்களை அரசியல்படுத்தாமல், தவறாக வழிநடத்துகிறார் என்பதுதான் பிரதான விமர்சனமாக உள்ளது. அப்படி இருக்கையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விஜய்யை பயங்கரமாக பாராட்டியுள்ளார்.
மதிமுகவும் அதே டெக்னிக்
"அதுவும் அரசியல் புரிதல் விஜய் புதிய வாக்காளர்களை ஈர்க்கிறார். தமிழ்நாடு இளைஞர்களை அரசியல்படுத்துகிறார். மதவாத சக்திகளை ஏன் எதிர்க்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு புரிய வைக்கிறார். பெரியார், அண்ணாவை கொண்டு சேர்க்கிறார்" என ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் துரை வைகோ கூறியுள்ளார்.
தவெகவின் கொள்கை எதிரி என்று விஜய் தன்னுடைய முதல் மாநாட்டிலேயே அறிவித்துவிட்டார். ஆனால் திமுக, அதிமுகவை போல பாஜகவை விஜய் விமர்சிப்பதே இல்லை என்பதுதான் குற்றச்சாட்டாக இருக்கிறது. விஜய்யை பாராட்டி திமுகவிடம் தங்களின் பேரத்தை அதிகரிக்கும் காங்கிரஸின் அதே டெக்னிக் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்!












Click it and Unblock the Notifications