விஜய் கூட 1.5 மணி நேரம் பேசினேன்..அதுக்கு பரிசு இந்த கேஸ்! குதிரைபேர வழக்கில் சிக்கிய திருநாவுக்கரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய்யுடன் தேர்தலுக்கு முன்பு ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினேன் எனவும், இந்த வழக்கு எனக்கு கிடைத்த பரிசு எனவும், காலம் ஒருநாள் பதில் சொல்லும் தவெக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் பேசியதாக கைதான வழக்கில் கைதான திருநாவுக்கரசு கூறியுள்ளார். மேலும், இப்போது பேசினால் எனக்கும் என் குடும்பத்திற்கும்தான் பாதிப்பு, உரிய நேரத்தில் அனைத்தையும் சொல்வேன் எனவும் பேசியுள்ளார்.

ரூ.35 கோடி குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள திருநாவுக்கரசு, ஜாமீன் நிபந்தனையின்படி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்," வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது முழுமையாக பேச விரும்பவில்லை. உரிய நேரத்தில் அனைத்து உண்மைகளையும் வெளியிடுவேன். தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

Thirunavukkarasu TVK Vijay

திருநாவுக்கரசு

இளையராஜாவிடம் தான் பேசியது உண்மை. ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக தரவுகளை சேகரிப்பதற்காகவே அவரை தொடர்பு கொண்டேன். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருடன் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தொடர்பு இல்லை என்பதுதான் எனது தரப்பில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள வாதம். மேகாலயா ப்ராஜெக்ட் என அப்படி ஒரு ப்ராஜெக்ட் பற்றி நான் பேசவே இல்லை.

கருத்துக்கணிப்பு

சிங்கப்பூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஹவாலா பணம் தனக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுவது தவறு. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ஆய்வு மற்றும் தேர்தல் கருத்துக்கணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை சுமார் 65 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். 2004-ஆம் ஆண்டு முதல் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தேர்தல்களுக்கு முன்பாக பல்வேறு அரசியல் கணிப்புகளை வெளியிட்டுள்ளேன்.

தமிழக வெற்றிக் கழகம்

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வளர்ச்சி மற்றும் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து தேர்தலுக்கு முன்பே நான் ஆய்வு செய்தேன். மேலும், தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியதோடு, ஜான் ஆரோக்கியசாமி, சரண் ரெட்டி உள்ளிட்டோருடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். இந்த ஆலோசனைகளுக்காக தாம் எந்த கட்டணமும் பெற்றுக்கொள்ளவில்லை.

நன்றிக்கான பரிசு

அந்த ஆலோசனைக்கு கூட எனக்கு பீஸ் கொடுக்கவில்லை. அந்த நன்றிக்கான பரிசுதான் இந்த வழக்கு. காலம் பதில் சொல்லும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வழக்கு குறித்து இப்போது பேசினால் எனக்குத்தான் பிரச்சனை வரும். நாளைக்கு பாதிக்கப்படுவது நானும் என் குடும்பமும்தான். சிறையில் 37 நாட்களாக உணவு சரியாக உட்கொள்ள முடியாத நிலை இருந்தது. சிறை வாழ்க்கை மிகவும் கொடூரமாக இருந்ததது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்.

உண்மை வெளிவரும்

தற்போது முழுமையான விளக்கங்களை அளிக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்றும், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னர் ஊடகங்களை சந்தித்து அனைத்து விவரங்களையும் தெரிவிப்பேன். மேலும், பத்திரிகையாளர்களை சந்திப்பதில் இருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை. உண்மைகள் ஒரு நாள் வரும். காலங்கள் பதில் சொல்லும். நீதி நிச்சயமாக வெல்லும். அதுவரை பொறுமையாக இருங்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+