நட்பு சக்தி இல்லையென்றாலும்.. சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கும் தவெக.. சூசகமாக அறிவித்த விஜய்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் நட்பு சக்தி இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி.. தனியாக நின்றாலும் கெத்தாக வெல்லக் கூடியதுதான் தவெக படை என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக எந்தக் கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முன் வரவில்லை என்ற விவாதம் எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி இறுதி செய்வதில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, பாஜக, தமாகா, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியன், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருக்கின்றன. திமுக கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கும் சூழலில், தேமுதிகவுடன் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் முதல்முறையாக சட்டசபைத் தேர்தலில் தவெக போட்டியிட உள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டிலேயே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்தார். ஆனாலும் தவெகவுடன் இதுவரை கூட்டணி அமைக்க எந்தக் கட்சியும் செல்லவில்லை. அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய போது, கடைசி நேரத்தில் டிடிவி தினகரன் ட்விஸ்ட் கொடுத்துவிட்டார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடங்கி போகிறதுக்கோ, அடிமையாகி போவதற்கோ, அண்டி பிழைப்பதற்கோ நான் அரசியலுக்கு வரவில்லை. அறிஞர் அண்ணா சொன்னதை வாய்மொழியாக அல்லாமல் செயல்மொழியில் இருக்க வேண்டும்.
ஆண்ட கட்சி ஆக இருக்கட்டும் ஆளுகிற கட்சியாக இருக்கட்டும் பூத் என்றால் என்னவென்று தெரியுமா? கள்ள ஓட்டு போடுகிற இடம், ஆனால் நமக்கு அது ஜனநாயகக் கூடம். அதேபோல் நட்பு சக்தி இருந்தாலும் இல்லையென்றாலும், தனியாக நின்று வெல்லும் அளவிற்கு மிகப்பெரிய படை. நமக்கென்று மகளிர் படை உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக தவெக கூட்டணியில் இணைய எந்தக் கட்சியும் முன்வரவில்லை என்று பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் விஜய் பேசி வந்தார். காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்திருந்தார். ஆனால் விஜய்யின் இந்த பேச்சு, ராகுல் காந்தி மீண்டும் திமுக கூட்டணியுடன் பயணிக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
-
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
தமிழக பள்ளிகளில் விபூதி - குங்குமம் வைத்து செல்ல தடையா? கல்வி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications