ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு?
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பிரமாணபத்திரத்தில் தவறுகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. "கடைசி நேரப் பதற்றமா அல்லது சட்டக் குழுவின் கவனக்குறைவா?" என அறிவாலயமும் கோட்டையும் ஒருபுறம் உற்று நோக்க, மறுபுறம் தவெக தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இரண்டு தொகுதி... இரண்டு முகம்!
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் களம் காணும் விஜய், தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் உள்ள முரண்பாடுதான் இப்போது ஹாட் டாபிக்.
பெரம்பூர்: இங்கே தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீது எந்தக் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு: ஆனால், இங்கே தாக்கல் செய்யப்பட்ட மனுவிலோ, 2025-ம் ஆண்டு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரே நபர், ஒரே தேர்தல்... ஆனால் ஒரு இடத்தில் 'க்ளீன் சீட்', இன்னொரு இடத்தில் 'வழக்கு உண்டு' என்பது தேர்தல் ஆணையத்தின் ஸ்கேனரில் சிக்கினால், பெரம்பூர் வேட்புமனு நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது.
சட்டக் குழுவின் 'மிஸ்ஸிங்' வியூகம்!
"விஜய் போன்ற ஒரு கட்சித் தலைவர் ஒருவரின் வேட்புமனுவில் இவ்வளவு பெரிய குளறுபடியா?" என்பதே அரசியல் விமர்சகர்களின் கேள்வி. இதைக் கையாள தவெக-வின் சட்டக் குழு கோட்டை விட்டுவிட்டதாகவே தெரிகிறது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுத் தாக்கல் செய்து, "தேர்தலில் போட்டியிட இருப்பதால், தமிழகம் முழுவதும் என் மீது நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை காவல்துறை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தால், இந்த தர்மசங்கடத்தைத் தவிர்த்திருக்கலாம். இப்போது 'அவசரக் குடுக்கை' தனமாகச் செயல்பட்டது கட்சிக்கு ஒரு நெகட்டிவ் இமேஜை உருவாக்கியுள்ளது.
"தலைவருக்கே இந்த நிலை என்றால், மற்ற வேட்பாளர்களின் கதி என்ன?" - இதுதான் தற்போதைய தவெக தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ்!
தப்பிக்க வழி இருக்கிறதா?
ஆனால் தவெகவினர் பயப்படத் தேவையில்லை, இன்னும் காலம் கடந்துவிடவில்லை! ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு நான்கு செட் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். விஜய் இதுவரை பெரம்பூரில் இரண்டு செட் மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளார்.
ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்குக் கடைசி நாள்
அதற்குள் மீதமுள்ள இரண்டு செட்களில், மதுரை வழக்கைக் குறிப்பிட்டுச் சரியான தகவல்களுடன் புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தால் இந்தப் பிழையைச் சரிசெய்துவிடலாம்.
விஜய் கவனத்திற்கு: அரசியலில் வேகம் மட்டும் போதாது, விவேகமும் சட்ட நுணுக்கங்களும் மிக முக்கியம். தன் டீமை 'ரீ-வாம்ப்' (Revamp) செய்து, அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு வேட்புமனுக்களைச் சரிபார்ப்பதே விஜய்க்கு இப்போதைய அவசரத் தேவை! இல்லையென்றால், எதிரணிக்கு இதுவே பெரிய 'அல்வா' ஆகிவிடும்!
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்










Click it and Unblock the Notifications