Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 முதல்வர் + 2 துணை முதல்வர்.. காங்கிரஸிடம் விஜய் டீல்! தவெகவின் கேரளா + புதுச்சேரி + தமிழ்நாடு குறி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக முக்கியமான பார்முலா ஒன்று அவர் சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் + 100 இடங்களில் தவெக போட்டியிடும் காங்கிரஸ் இந்த கூட்டணியில் இருக்கும். கேரளாவில் 10 இடங்கள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். புதுச்சேரியில் 5- 10 தொகுதிகள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். இதற்காக விஜய் தீவிரமாக காங்கிரசின் டெல்லி தலைகள் உடன் பேசி வருகிறாராம்.

Edappadi Palanisamy TVK Vijay

பிரவீன் சக்ரவர்த்தி உடன் சந்திப்பு

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தினார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இதையடுத்து இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி செய்துள்ள போஸ்டில், இந்திய அரசியல் கட்சிகள், தங்கள் தலைவர்களின் பேரணிகளுக்குப் பெரும் கூட்டத்தைக் கூட்ட கணிசமான நேரம், பணம் மற்றும் உழைப்பைச் செலவிட்டு வருகின்றன. ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் நிலைமை இதற்கு நேர் எதிரானது. தங்கள் பேரணிகளில் அதிக மக்கள் கூடுவதால், கூட்டத்தைக் குறைப்பதே அவர்களுக்குள்ள சவாலாக உள்ளது, இது பலருக்கும் வியப்பளிக்கிறது என்று விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தை பாராட்டுவது போல பேசி இருந்தார்.

விஜயின் பிளான் என்ன?

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கேரளாவில் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை TVK ஆய்வு செய்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் கணிசமாக வாழும் பகுதிகள் மற்றும் விஜய்க்கு வலுவான ரசிகர் பட்டாளம் இருக்கும் மாவட்டங்களில், கட்சி உறுப்பினர்கள் களப்பணியைத் தொடங்கியுள்ளனர். இது, கட்சி கேரள அரசியலில் கால் பதிப்பதற்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக, கேரளாவில் TVK ஆதரவாளர்களின் சமூக வலைத்தள செயல்பாடு அதிகரித்துள்ளது. சாத்தியமான வேட்பாளர்களாகக் கருதப்படும் சிலர், சமூக நலன் சார்ந்த பணிகள், தொண்டு நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் சமூகப் பங்கேற்புகள் குறித்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் மூன்று மாநிலம்

மூத்த குடிமக்களுக்கு உதவுதல், அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல், மாணவர்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற முயற்சிகள் இந்த பதிவுகளில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்னதாக TVK தனது அரசியல் இருப்பை கேரளாவில் அதிகரிக்க விரும்புகிறது. இதற்காக தினமும் ரீல்ஸ் போடவும் தொடங்கி உள்ளனர்.

TVK-ன் வருகை கேரளாவில் சிறிய அளவில் இருந்தாலும், கேரளத் தேர்தலில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கக்கூடும். கேரள அரசியல் பெரும்பாலும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆதிக்கத்தில் உள்ளது. பாஜக தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் அங்கே பெரிய அளவில் மாற்று கட்சியாக கால் பதிக்கும் சூழலும் உள்ளது.

தமிழக வெற்றிக் கழக வட்டாரங்களில், கேரளாவில் தங்களின் அமைப்புக் கட்டமைப்பை சோதிக்க ஒரு வாய்ப்பு இருப்பதாக தலைவர்கள் நம்புகின்றனர். கட்சி இன்னும் ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளதால், வரும் மாதங்களில் ஒரு தெளிவான திட்டத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே காங்கிரஸ் உடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைத்தாலும் வியப்பு இல்லை.

தற்போது, கேரளாவில் உள்ள TVK தொண்டர்கள் சிறிய கூட்டங்களை நடத்தி, உள்ளூர் குழுக்களுடன் இணைந்து, ஆன்லைன் ஆதரவை திரட்டி வருகின்றனர். இது, 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் முதல் அடியை எடுத்து வைப்பதற்கான தயாரிப்புப் பணிகளாகும்.

புதுச்சேரி பிளான்

புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக முயன்று வருகிறதாம். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதோடு சேர்த்து அடுத்த வருடம் புதுச்சேரியிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் விஜய் தீவிரமாக இருக்கிறாராம்.

புதுச்சேரிக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் தவெக தீவிரமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். அதாவது புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக புஸ்ஸி ஆனந்த் களமிறக்கப்பட வேண்டும் என்று விஜய் நினைக்கிறாராம். இதற்கு பின் சில காரணங்களும், விஜயின் சில யோசனைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்திற்குள் நிலவும் உள் முரண்பாடுகள் தற்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. புஸ்ஸி ஆனந்தின் சமீபத்திய செயல்பாடுகளிலும், அவரது அணுகுமுறைகளிலும் விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்தின் முக்கிய பொறுப்புகள் குறித்த பல புகார்களை விஜய் பெற்று வருவதாகவும், அவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் கட்சிக்குள் சீனியரான செங்கோட்டையன் வருகை புரிந்து உள்ளார். இவருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கு இடையே வரும் நாட்களில் ஈகோ மோதல்கள் ஏற்படலாம். ஏற்கனவே அருண், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்போது செங்கோட்டையனும் வந்துள்ளதால் அவருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கு இடையே வரும் நாட்களில் ஈகோ மோதல்கள் ஏற்படலாம்.

இதனால் புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரிக்கே திருப்பி அனுப்பும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று விஜய் யோசிக்கிறாராம். அங்கே புஸ்ஸி தலைமையில் தேர்தல் பணிகளை தீவிரமாக நடத்தி, அவரை அங்கே வெல்ல வைத்து முதல்வராக்கி விடலாம்.. தமிழ்நாட்டில் செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் அல்லது அதற்கு இணையான பதவியை கொடுக்கலாம்.

இதனால் உட்கட்சி மோதல் வராது. தமிழ்நாடு முழுமைக்கும் இனியும் புஸ்ஸி ஆனந்தை நம்பி இருக்க முடியாது. செங்கோட்டையனை இனி கட்சிக்குள் முன்னிறுத்தலாம் என்று விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது புதுச்சேரிக்கு புஸ்ஸி சென்றால்.. தமிழ்நாட்டில் தவெக உள்ளே மோதல்கள், கருத்து வேறுபாடுகள் குறையும் என்று விஜய் நினைக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+