Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லீம் வாக்குகளை பிரிக்கும் விஜய்.. ஓவைசி கூட்டணிக்கு பிளான் போடும் தவெக.. திமுகவிற்கு செக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி உடன் தமிழ்நாட்டில் கூட்டணி வைக்க ஆலோசனைகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி தமிழ்நாட்டில் தனது அரசியல் கால் தடத்தை பதிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஹைதராபாத் மற்றும் பிற மாநிலங்களில் வலுவான அடித்தளம் இருந்தாலும், தமிழ்நாட்டில் இக்கட்சியின் பங்களிப்பு இதற்கு முன்பு குறைவாகவே இருந்தது. எனினும், சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் கூட்டணி அமைத்து தனது செல்வாக்கை அதிகரிக்க AIMIM முனைப்புக் காட்டி வருகிறது.

congress

அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், AIMIM டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் (AMMK) கூட்டணி கண்டது. அக்கூட்டணியின் கீழ், கட்சி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் என மூன்று தொகுதிகளில் போட்டியிட்டது.

இதனைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலுக்காக, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கு தமிழ்நாட்டில் ஆதரவு அளிப்பதாக AIMIM அறிவித்தது.

மேலும், இந்த ஆதரவு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடரும் என AIMIM கூறியது. தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் AIMIM-இன் அண்மைக்கால முயற்சிகளும், விரிவாக்க ஆர்வமும் இதன் மூலம் புலப்படுகின்றன. 2021-க்கு முன்னர், தமிழகத்தில் AIMIM-க்கு முறையான கூட்டணிகள் குறித்து பரவலான செய்திகள் எதுவும் இல்லை.

ஆனால் இப்போது அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது. இதனால் பாஜக உள்ள கூட்டணியில் இணைவது அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் (AIMIM) கட்சிக்கு சிக்கலாக மாறும். இதனால் அவர் வேறு கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே அவருக்கு டிடிவி தினகரன் உடன் நல்ல நட்பு உள்ளது. ஒருவேளை டிடிவி தினகரனின் அமமுக விஜயின் தவெக கூட்டணிக்கு செல்லும் பட்சத்தில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியும் தவெக கூட்டணிக்கு செல்லும்.

விஜய் - அசாதுதீன் ஓவைசி பேச்சுவார்த்தை

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணி உருவானால் தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18% வாக்குகள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் பங்களிப்பால் கிடைத்தது. இந்த இரு தலைவர்களும் அதிமுகவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உடன் இணைந்தால் முக்குலத்தோர் வாக்குகளை தமிழக வெற்றி கழகத்திற்கு மாற்ற முடியும். நடிகர் விஜய் சரியான தொகுதியை தேர்ந்தெடுத்தால் தென் தமிழகத்தில் வெற்றி கூட பெற முடியும். டிடிவி தினகரன் விஜய் கூட்டணிக்கு வந்த பின் அவர் ஓவைசியை தவெக கூட்டணிக்கு அழைத்து வரும் வாய்ப்புகள் உள்ளன.

சிறுபான்மையினர் வாக்குகள்

ஏற்கனவே விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி உடன் தமிழ்நாட்டில் கூட்டணி வைக்க ஆலோசனைகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் திரைமறைவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் மூலம் இந்த சந்திப்புகள் வரும் காலங்களில் நடக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவிற்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்குகள்.. முஸ்லீம், கிறிஸ்துவர்கள் வாக்குகள்தான் விஜயின் முக்கிய குறியாக உள்ளது. அந்த வாக்குகளை மொத்தமாக தூக்கவே விஜய் திட்டமிட்டுள்ளார். இதை மனதில் வைத்தே அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி உடன் விஜய் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+