சும்மா விடக்கூடாது! அஜித் குமார் வீட்டிற்கு போய் வந்தவுடன்.. விஜய் போட்ட ஆர்டர்.. லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: திருப்புவனம் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் என்ற இளைஞரின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சந்திப்பிற்கு பின், கட்சி நிர்வாகிகளிடம் விஜய் சில முக்கிய விஷயங்களைப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் மரண வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞர் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீஸ் டார்ச்சர் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் அவரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், அஜித் குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
விஜய்யின் சரியான முடிவு
அஜித் குமாரின் மரணத்தில் ஒரு நல்ல அரசியல் கட்சியாகவும், மக்களின் பக்கம் நிற்கும் கட்சியாகவும் தமிழக வெற்றிக் கழகம் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது. மரணத்தில் அரசியல் செய்வது தவறான அணுகுமுறையாக இருந்தாலும், காவல்துறையினரே சம்பந்தப்பட்ட ஒரு கொலையில், அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதும், மக்கள் பக்கம் நின்று நீதிக்காகப் போராடுவதும் எதிர்க்கட்சிகளின் கடமை. நடிகர் விஜய் அதைச் சரியாகச் செய்துள்ளார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும், கேள்விகளும், நேரடியான அழுத்தங்களுமே ஒரு ஜனநாயகம் சரியாக இயங்குவதற்கான சான்றுகள். ஆளும் கட்சி எவ்வளவு நல்ல கட்சியாக இருந்தாலும், அவர்களைக் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் எப்போதும் தேவை. அந்த வகையில், நடிகர் விஜய் தனக்கான ஒரு எதிர்கட்சி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
போராட்டத்திற்கு விஜய் உத்தரவு
ஜூலை 6-ம் தேதி சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்டமான போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு விஜய் நேற்று இரவே சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் பேரையாவது திரட்ட வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். மேலும், அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது மிகவும் அவசியம். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்யின் தலையீடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதலாகவும், நீதிக்கான போராட்டத்திற்கு உந்துதலாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications