லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!
சென்னை: ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த நிலையில் திறந்த மனதோடு சாட்டையில் வெளியிடுகிறேன் எனச் சொல்லியும் கோரிக்கையை ஏற்க மறுத்து இணையத்தில் ஜனநாயகன் படத்தை வெளியிட்டிருக்கிறார் பக்காமாஸ் ! அதே கேசரி ! என்று நாம் தமிழர் சாட்டை துரைமுருகன் இதை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகமே தேர்தல் காய்ச்சலில் தகித்துக்கொண்டிருக்க, விஜய்யின் கடைசி ஆட்டமான 'ஜனநாயகன்' படத்திற்கு இப்போது ஒரு புது 'தலைவலி' வந்திருக்கிறது. எடிட்டிங் டேபிளில் இருந்து கசிந்ததா அல்லது திட்டமிட்டு கசியவிடப்பட்டதா எனத் தெரியவில்லை, ஆனால் இணையதளங்களில் 'ஜனநாயகன்' படத்தின் முக்கியமான அரசியல் காட்சிகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

டைமிங் முக்கியம் பாஸ்!
சரியாக தேர்தல் நடக்க இன்னும் இரண்டே வாரங்கள் உள்ள நிலையில் படம் ரிலீஸானால் விஜய்க்கு சாதகம். இப்படிப்பட்ட நிலையில் அரசியல் வாடை தூக்கலாக அடிக்கும் காட்சிகள் லீக்காகி உள்ளது. ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் 'படம் ரிலீஸானால் அனுமதிக்காது. இன்னொரு பக்கம் சென்சார் போர்டு சிக்கல் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேரடியாக மக்களை படம் சென்று அடையும் வகையில் படம் லீக்காகி உள்ளது.
தொடக்கத்தில் 5 நிமிட கிளிப் தொடங்கி, இப்போது 3 மணி நேர முழுப் படமும் தந்தி (Telegram) அடித்துக்கொண்டிருக்கிறது.
அரசியல் அனல்... லீக்கான ரகசியம்!
படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? லீக்கான காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் 'ஷாக்' ஆகியிருக்கிறார்கள். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை காட்டுவது போல செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத்.
சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சிகளில், "வாக்குக்குக் காசு கொடுப்பவன் திருடன் என்றால், வாங்குபவன் யார்?" - போன்ற அனல் பறக்கும் வசனங்கள்.
தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேரங்கள் என கோட்டைக்குள் நடக்கும் அரசியலை அக்குவேறாகப் பிரித்து மேய்ந்திருக்கும் காட்சிகள கூட உள்ளன.
முக்கியமாக, படத்தில் விஜய் பேசும் பல வசனங்கள் நேரடியாக தற்போதைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சீண்டுவது போல அமைந்திருப்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். தவெக கட்சிக்கு பில்ட் அப் தருவது, விஜயை எம்ஜிஆர் போல காட்டுவது என்று ஓவர் டோஸ் மசாலா போட்டுள்ளனர். கேசரி படத்தின் ரீமேக்தான் இது. அதில் கொஞ்சம் கூடுதலாக அரசியல் கலந்து உள்ளனர்.
சதியா... தற்செயலா?
KVN புரொடக்ஷன்ஸ் தரப்போ பதறிப்போய் சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறது. ஆனால், "படம் ரிலீஸானால் எங்களுக்குப் பாதிப்பு வரும் என நினைப்பவர்கள்தான் இதைச் செய்திருக்கிறார்கள்" என ஒரு தரப்பு கூற, "இல்லை, படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பதால், மக்களிடம் கொண்டு சேர்க்க விஜய் தரப்பே செய்த யுக்தி" என ஊகங்கள் சிறகடிக்கின்றன.
தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு நடிகரின் படம், ரிலீஸாவதற்கு முன்பே அரசியல் காரணங்களுக்காகத் தடைபடுவதும், பின் இப்படி லீக் ஆவதும் இதுவே முதல்முறை. சென்சார் போர்டு 'கட்' கொடுத்த காட்சிகள்கூட இப்போது அன்-கட் வெர்ஷனாக மொபைலில் வலம் வருவதுதான் தேர்தல் கமிஷனுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது.
க்ளைமாக்ஸ் என்ன?
ஏற்கனவே 'ஜனநாயகன்' படத்தின் தலைப்புக்கும், விஜய்யின் அரசியல் வருகைக்கும் ஏகப்பட்ட நெருக்கடிகள். இப்போது லீக் ஆன காட்சிகள் மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வாக்குப்பதிவு அன்றுதான் தெரியும். 'விஜயின் கடைசிப் படத்தை தியேட்டரில் பார்க்கக் காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் என்றாலும், அரசியல் களத்தில் இது ஒரு 'சைலண்ட்' பிரச்சாரத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில், 'ஜனநாயகன்' தியேட்டருக்கு வருகிறாரோ இல்லையோ, ஒவ்வொரு ஓட்டரின் வாட்ஸ்அப்பிற்கும் வந்து சேர்ந்துவிட்டார்!












Click it and Unblock the Notifications