சனிக்கிழமை கரூர் துயரம்.. இனி வியாழனில் பிரச்சாரம்! ‘வி’ சென்டிமென்டை மெயின்டெயின் செய்யும் விஜய்?
சென்னை: வீக் என்ட் அரசியல்வாதி என விமர்சிக்கப்பட்ட விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட தலைமறைவானது போலவே இருந்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் பொதுவெளிக்கு வந்திருக்கும் அவர் சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சார பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் கடந்த முறை போல சனிக்கிழமைகளில் அல்லாமல் இனி வியாழக்கிழமைகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் வியாழக்கிழமைகளை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து ஒரே ஆண்டுக்குள் இரண்டு மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் விஜய். ஆனால் அதற்குப் பிறகும் முன்னதாகவும் மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு விஜய் மீது முன் வைக்கப்பட்டது.
ட்விட்டர் அரசியல், பனையூர் பண்ணையார், ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என விஜய் மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. காரணம் கட்சியை ஆரம்பித்தபோது பெரிய அளவில் மக்கள் பிரச்சனைகளுக்கு விஜய் நேரில் குரல் கொடுக்கவில்லை.

விஜய் பிரசாரம்
வெள்ளப் பாதிப்பின் போது கூட பாதிக்கப்பட்டவர்களை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணம் கொடுத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த விமர்சனங்களை போக்கும் வகையில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்ட விஜய் அதனை திருச்சியில் இருந்து தொடங்கினார். நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் வெற்றிகரமாக பிரச்சாரம் நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் கூட்டணி சிக்கி 41 பேர் பலியான சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கரூர் சம்பவம்
விஜய் மிக தாமதமாக வந்ததும், உரிய ஏற்பாடுகள் செய்யப்படாததும் இந்த துயர சம்பவத்திற்கு காரணமாக முன்வைக்கப்பட்டது. இதனிடையே தமிழ்நாடு அரசு கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து விஜய் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தது போலவே செயல்பட்டு குறிப்பிடத்தக்கது.
அரசியல் நிகழ்வு
இதற்கிடையே சமீபத்தில் பொதுக்குழுவை நடத்திய விஜய் தற்போது, சேலத்தில் இருந்து மீண்டும் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக அனுமதி கேட்டு மனுவும் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சனிக்கிழமைகளை விடுத்து வியாழக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வியாழக்கிழமை, விஜய் என்ற 'வி' சென்டிமென்டோடு, வியாழக்கிழமை என்றால் பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்று விடுவார்கள், இளைஞர்களும் வேலைகளுக்கு சென்று விடுவார்கள், இதனால் பெரிய அளவில் கூட்டம் திரள வாய்ப்பில்லை என்பதால் தான் அந்த கிழமையை தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது.
வியாழனில் பிரச்சாரம்
மேலும், வர வேண்டும் என்பதற்காகவே சனிக்கிழமைகளில் விஜய் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் வார நாட்களில் வைத்தால் கூட்டம் வராது என விமர்சனம் எழுந்து நிலையில் வியாழக்கிழமைகளில் வைத்தாலும் தனக்கு கூட்டம் வருமா என்பதை சோதித்துப் பார்ப்பதற்காகவே விஜய் வியாழக்கிழமைகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்கின்றனர். அது மட்டும் அல்லாமல் ஜோசியர் ஒருவரின் ஆலோசனையின் படியும் இந்த வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
காவல்துறை
இது ஒரு புறம் இருக்க விஜயின் பிரச்சார கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கரூர் நெரிசல் சம்பவத்திற்கு பிறகு காவல்துறை மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில் இனி வரும் காலங்களில் அது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என்பதால், ஊருக்கு வெளிப்புறங்களில் மட்டுமே விஜய்க்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்











Click it and Unblock the Notifications