Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘தம்பி விஜய் வரலாறு தெரிஞ்சு பேசுங்க’ – பாஜக மீதான விமர்சனத்துக்கு குஷ்பு அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் இப்போதிருந்தே பரபரக்க தொடங்கிவிட்டது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவின் கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் விஜய் அறிவித்துள்ளார். அவர் பாஜக மீது வைக்கும் விமர்சனங்களுக்கு, தம்பி விஜய் வரலாறு தெரிந்து பேச வேண்டும் என்று குஷ்பு அட்வைஸ் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜகவின் மையக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

tvk-vijay-should-learn-history-said-kushboo

திமுக குடும்ப அரசியல்

இதற்காக பாஜக அலுவலகம் வந்த அந்த கட்சியின் மாநில துணை தலைவரும், நடிகையுமான குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தேர்தல் வரப்போகிறது. என்ன செய்ய போகிறோம், கள நிலவரம் திட்டங்கள், கூட்டணி ஆகியவற்றை குறித்து ஆலோசிக்க போகிறோம். பிஎல் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளோம். தேர்தல் தொடர்பான நிறைய விஷயங்கள் குறித்து பேச போகிறோம். எங்களுக்கு அதிமுகவுடன் எந்தப் பிரச்சனையும் கிடையாது.

எங்கள் கூட்டணியிலும் பிரச்சனை இல்லை. கூட்டணியை எப்படி சேர்ப்பது என்பதை கட்சி பெரியவர்கள் முடிவு செய்வார்கள். கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் மக்கள் எந்தளவுக்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிவோம். குடும்ப அரசியல் மட்டும் தான் நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சரின் குடும்பத்தினர் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர். பெண்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் வேறு எந்த பெண்ணும் வந்தது மாதிரி நான் பார்க்கவில்லை.

ஏன் பெண்களை அழைக்கவில்லை

இளையராஜாவின் 50 ஆண்டு கால இசை வரலாற்றில் ஒரு பெண் கூட அவரின் இசையில் பாடவில்லையா. ஒரு பெண்ணைக் கூட அழைக்கவில்லை. இதுதான் நீங்கள் பெண்கள் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் லட்சணமா. எனக்கு புரியவில்லை. நீங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்காக துணை நிற்கிறீர்கள் என்றால், அரசு நடத்தும் நிகழ்ச்சியில் ஒரு பெண் கூட ஏன் கலந்துகொள்ளவில்லை. ஏன் அழைப்பு விடுக்கவில்லை. நான் விசாரித்தவரை யாரையும் அழைக்கவில்லை.

விஜய் வெற்றி பெறுவாரா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அடுத்த வருடம் தான் தேர்தல் உள்ளது. அதை நாம் சொல்லி பிரயோஜனம் இல்லை. அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். தேர்தலில் பார்ப்போம். விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதை மக்கள் ஏற்கிறார்களா என்பதுதான் முக்கியம். அதேநேரத்தில் அவர் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

தம்பி விஜய்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது புதிதல்ல. ஏற்கனவே இருந்தது தான். அதை தங்களின் அரசியலுக்காக காங்கிரஸ் பிரித்தனர். விஜய் என் தம்பியாக இருந்தாலும், கொஞ்சம் அரசியல் வரலாறு என்ன சொல்கிறது என்பதை தெரிந்து பேச வேண்டும். பாஜக ஒன்றும் புதிதாக ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வரவில்லை. இருந்ததைத்தான் பாஜக திரும்பி கொண்டு வர முயற்சி செய்கிறது." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+