கதறல் சப்தம் எப்படி இருக்குது? மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே! தவெக கூட்டத்தில் விஜய் தாக்கு
சென்னை: கதறல் சப்தம் எப்படி இருக்கிறது என தனது பேச்சை தொடங்கியதுமே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கேள்வி எழுப்பினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் இன்றைய தினம் நடந்து வருகிறது.
திருவான்மியூரில் ராமசந்திரா கன்வென்ஷன் ஹாலில் இன்று தவெக பொதுக் குழு நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது: தோழர்களே தோழிகளே! கதறல் சப்தம் எப்படி இருக்கிறது என விஜய் கேட்டதும் கூட்டத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

மேலும் விஜய் தொடர்கையில், தமிழுக்கு அமுதென்று பெயர். தமிழ்நாடு இருக்கும் சூழலில் நாம் புதிய வரலாறு படைக்க தயாராக வேண்டிய அவசியத்தை புரிந்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எல்லா குடும்பமும் நன்றாக வாழுறதுதான் தேவை. ஆனால் ஒரே ஒரு குடும்பம் மட்டும் சுரண்டி சுரண்டி நல்லா வாழுறது அரசியலா?
திராவிட மாடல்
கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல். மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சி நமக்கு எதிராக செய்யும் ஒன்றா, இரண்டா? புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், பொதுக் குழுவுக்கு தடைகள் என மாற்றி மாற்றி குடைச்சல் கொடுத்தீங்க.
நானும் அடிக்கணுமா?
ஏற்கெனவே அர்ஜுன், நிர்மல்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் நல்லா அடித்துவிட்டார்கள். நாமும் அடிக்கணுமானு யோசனையா இருக்கு. (திமுக, பாஜகவை விமர்சிப்பதை குறித்து கூறுகிறார்). மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பேர மட்டும் வீராப்பா சொன்ன பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் காட்டணும்.
பாசிஸம்
மத்திய அரசு பாசிஸம் செய்றதுனு சொல்றீங்களே நீங்கள் செய்யுறதும் பாசிச ஆட்சிதானே! நான் என் நாட்டு மக்களை சந்திக்கக் கூடாது என எனக்கு தடை போட நீங்கள் யாரு சார்? நேற்று வந்தவன் முதல்வரா என கேட்கிறீர்கள். அப்போ எனக்கு ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.
அணை போடலாம், ஆனால்
அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறினால் அது சூறாவளியாகவோ சக்திமிக்க புயலாக மாறும். இந்த மண் பிளவுவாத சக்திரளுக்கு எதிரானது. மாண்புமிகு திரு மோடி ஜி அவர்களே பெயரை சொல்ல எங்களுக்கு பயமா, மத்தியில் ஆட்சி செய்யுறது பாஜகதானே, காங்கிரஸா என்ன, மாநிலத்தில் ஆட்சி செய்யுறது யாரு திமுகதானே, அதிமுகவா? என கேள்வி எழுப்பினார்.
வன்கொடுமை
மேலும் விஜய் பேசுகையில் மகளிருக்கு எதிரான வன்கொடுமையை சொல்ல முடியவில்லை.. இதில் உங்களை அப்பா என்று சொல்வதாக கூறுகிறீர்கள்.. திமுக ஆட்சிக்கும், அரசியலுக்கும் என் சகோதரிகளான தமிழ்நாடு பெண்கள் முடிவு கட்டப் போகிறார்கள். ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி.. ஊழலுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக.
வித்தியாசமான தேர்தல்
2026 சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்க போகிறது.. இந்த தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி.. ஒன்று தவெக.. மற்றொன்று திமுக. தமிழ்நாடு என்றால் உங்கள் ஏன் ஜி அலர்ஜி. தமிழ்நாட்டுடன் விளையாடாதீர்கள் பிரதமர் சார், பலருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம் தமிழகம். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பாஜகவின் திட்டம் என்ன என்பது தெரிந்து விட்டது. தவெக ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் பாதுகாப்போம்.
உழைக்கும் மக்களுக்குத்தான் எப்போதும் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாக இருக்கும். அடிப்படை கொள்கைகளில் தமிழக வெற்றிக் கழகம் என்றும் உறுதியாக இருக்கும். எங்கள் அரசியலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு விஜய் பேசினார்.
-
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு











Click it and Unblock the Notifications