விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேபோல் தவெக இந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிடவுள்ளது. இதனால் தவெக என்ன சின்னத்தில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கேற்ப தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பொதுச் சின்னம் வழங்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இதற்காக நவம்பர் மாதமே டெல்லியில் முகாமிட்டு விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் தேர்தல் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான 190 சின்னங்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு கட்சியும் 10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்படி தவெக தரப்பில் முதல் சின்னமாக விசில் சின்னத்தை அளிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. விசில் சின்னம் கிடைக்கவில்லை என்றால், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட சின்னங்கள் கேட்கப்பட்டன. இந்த நிலையில் தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, தேர்தல் ஆணைய விதிகளின்படி கணக்குகளை தாக்கல் செய்ததால், அந்தக் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக விஜய்யின் வி செண்ட்மெண்ட்டும் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் பெயரில் உள்ள V என்ற வார்த்தையை கட்சியின் பெயரில் வெற்றி (V) என்ற கொண்டு வந்தார்.
தற்போது அதே வி செண்ட்மெண்ட் தவெக சின்னத்திலும் இடம்பெற்றுள்ளது. இதனால் வி செண்டிமெண்ட் விஜய்க்கு தேர்தலில் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications