நடிகையுடன் கனெக்சன்.. போட்டுடைத்த சங்கீதா! பரபர பஞ்சாயத்துக்கிடையே தஞ்சை வரும் விஜய்! பேசுவாரா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தஞ்சையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த விவகாரம் பொதுவெளியில் பேசுபொருளான பிறகு முதன் முறையாக விஜய் பொதுவெளியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விஜய் பதிலளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தமிழகத்தில் தற்போதைய சூழலில் நான்கு முறை போட்டியின் நிலவுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி உறுதியாகி இருக்கிறது. இதனையடுத்து, தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

விஜய் தஞ்சை கூட்டம்
இந்த நிலையில் தமிழக அரசியல் வரலாற்றின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலைஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தற்காலிக திடல் அமைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட 4,900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
விஜய் மக்கள் சந்திப்பு
திடலுக்குள் நுழையும்போது க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும் என ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றி போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 23ஆம் தேதி வேலூரில் நடிகர் விஜய் பொதுவெளியில் தோன்றி தொண்டர்களிடையே பேசினார். அதற்கு பிறகு அவர் எங்கும் தென்படவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தர வேண்டும் என செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சங்கீதா விவாகரத்து வழக்கு
அதில் நடிகை ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் விஜய் இருந்ததாகவும் அவருடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது என இருந்ததோடு தன்னை புறக்கணித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விஜய் தன்னை குடும்ப வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் சங்கீதா தெரிவித்திருந்தார். தற்போது இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
தஞ்சாவூர் விஜய் பேச்சு
சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முதன்முறையாக விஜய் பொதுவெளியில் தோன்ற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களுக்கு விஜய் பதிலளிப்பாரா அல்லது அரசியல் மட்டும் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
-
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
TVK candidate list: தவெக வேட்பாளர் பட்டியல்! கோபியில் ’சீனியர்’ செங்கோட்டையன்! 10வது முறையாக களம் காண்கிறார்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications