காலையிலேயே மாணவர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்.. 2ஆம் கட்டமாக மாணவர்களை சந்திக்கும் விஜய்! எப்போது?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து கடந்த 30-ம் தேதி பாராட்டினார். இந்த நிலையில் ராமநாதபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை வரும் 4ஆம் தேதி சந்தித்து பாராட்ட உள்ளதாக தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே அதாவது 2023 ஆம் ஆண்டில் இருந்தே விஜய் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக மூன்று பேரை தேர்ந்தெடுத்து சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு பரிசு அளிப்பது வழக்கம்.
மேலும் நாள் முழுவதும் நின்று கொண்டே அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் பேசு பொருளானது.

தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்தாண்டும் விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கும் என்றே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறி வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பிளஸ் டூ தேர்வு கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், இந்தாண்டு விஜய் - மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி எப்போது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளின்படி சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்தனர். தொடர்ந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமைக்கு அனுப்பினர்.
இதனையடுத்து கடந்த 30ஆம் தேதி, அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில், நீட் தேர்வு குறித்து விஜய் பேசியது பரபரப்பை கிளப்பியது. இருப்பினும் வழக்கம் போல், அனைத்து ஊடகங்களிலும் அதுதான் பேசுபொருளானது.
— TVK Party HQ (@TVKPartyHQ) June 3, 2025
இதனால் மகிழ்ச்சி அடைந்த விஜய் அடுத்த கட்ட மாணவர் சந்திப்புக்கான தேதியை அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," முதல் கட்டமாக 30-ஆம் தேதி பாராட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இரண்டாவது கட்ட விழா மாமல்லபுரம் 4.5 ஷாரட்டனில் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கி பாராட்டுகிறார்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications