என் நேரடி கண்காணிப்பில், பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு என தனி இலாக்கா ஒதுக்கப்படும் - விஜய்
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சட்டசபைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக தவெக சார்பாக மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு என தனி இலாக்கா ஒதுக்கப்படும் அதுவும் என் நேரடி கண்காணிப்பில் என விஜய் கூறினார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெகவின் அரசியல் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சேலம், வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். மறுபக்கம் தவெக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தவும் தயாராகி வருகிறார்.

தவெகவுடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்காத சூழலில், தனித்து களமிறங்கவும் தயாராகி வருகின்றனர். அதேபோல் சட்டசபைத் தேர்தலின் ஒரு பகுதியாக தவெக சார்பாக வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே தஞ்சாவூரில் தவெக ஆட்சிக்கு வந்தால், உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம். 5 ஏக்கர் நிலம் வரை உள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய்வோம்.
நெல் கொள்முதல் நிலையங்களில் கமிஷனாக பணம் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும். மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல் சாலை வசதி மேம்பாடு, ஒவ்வொரு வீட்டிலும் இருசக்கர வாகனம் என்றும் சில மாதங்களுக்கு முன்பாக காஞ்சிபுரத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தவெக சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் மாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் சட்டசபைத் தேர்தலில் தவெகவின் மகளிருக்கான வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு என்று தனி இலாக்கா கொண்டு வரப்படும். அதுவும் என் நேரடி கட்டுப்பாட்டில் என்று விஜய் வாக்குறுதி அளித்தார். இதேபோன்று பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும். அண்ணன் சீராக 8 கிராம் தங்கம் தரமான பட்டுப்புடவை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக மகளிருக்கான வாக்குறுதிகள் மிகவும் ஸ்பெஷலாக இருந்தன. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டம் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்திருக்கின்றனர். இதற்கு போட்டியாக தற்போது விஜய்யும் வாக்குறுதிகள் அறிவித்துள்ளார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications