தேர்தலுக்கு முன் 1+ 3.. பிப்ரவரியில் விஜய் போடும் மெகா ஸ்கெட்ச்.. தட்டித்தூக்கும் தவெக!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ஒரு மாநாடு, 3 பொதுக்கூட்டங்களை நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி, மதுரை மாவட்டங்களில் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், மண்டல வாரியாக பொதுக்கூட்டத்தை நடத்தவும் ஆலோசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெகவுடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையை கூட தொடங்கவில்லை. இதனால் தவெக தலைவர் விஜய், நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும்.. சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் வெல்வோம் என்று பேசி வருகிறார். இதன் மூலமாக 234 தொகுதிகளிலும் தவெக தனித்து களம் காணும் என்று சொல்லப்படுகிறது.

இதனால் தவெகவின் பிரச்சாரம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பிப்ரவரி 1 முதல் ஒவ்வொரு நாளும் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளது. அதேபோல் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விஜய்யை கடுமையாக சாட தொடங்கி இருக்கின்றன. இதனால் விஜய் இன்னும் சுறுசுறுப்பாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தொண்டர்களிடம் குரல் எழுந்துள்ளது.
இதனை விஜய்யும் அறிந்தே வைத்திருக்கிறார். இதன் காரணமாக தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். அந்த ஆலோசனையின் போது சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ஒரு மாநாடு மற்றும் 3 பொதுக்கூட்டங்களை நடத்தலாமா என்று விஜய் ஆலோசித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்படியில்லை என்றால், மண்டல அளவில் பொதுக்கூட்டங்களை நடத்தலாமா என்றும் ஆலோசித்திருக்கிறார். ஏற்கனவே விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாவட்டத்தில் தவெக மாநாடு நடைபெற்றது. அடுத்த மாநாட்டை தென் மாவட்டத்தில் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தவெகவின் கூறி வருகின்றனர். இந்த பொதுக்கூட்டங்களின் போது தவெக வேட்பாளர்கள் அறிமுகமும் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
மண்டல அளவில் பொதுக்கூட்டம் நடத்தும் போது எளிதாக வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய முடியும் என்று விஜய் ஆலோசித்திருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதற்கு முன்பாக தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கான பொதுக்கூட்டத்தை விஜய் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications