Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஊழல்வாத அடிமை கட்சி" அதிமுகவை முதல்முறையாக அட்டாக் செய்த விஜய்.. காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை தீயசக்தி என்று விமர்சித்து வந்த விஜய், முதல்முறையாக அதிமுகவை ஊழல்வாத அடிமை கட்சி என்று விமர்சித்திருக்கிறார். விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு பின்னணியில் கூட்டணி அமையாததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரு கட்சிகளும் கைவிட்டுவிட்டன.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், நடிகர் விஜய்யின் தவெக முதல்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளது. விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் பெரியளவில் ஆதரவு இருக்கும் சூழலில், தேர்தலில் வெற்றி மற்றும் தோல்விக்கு இடையில் சில வாக்குகள் கூட வித்தியாசம் இருக்கலாம்.

TVK Vijay

இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சிறிய வாய்ப்பை கூட எதிர்க் கட்சிகளுக்கு வழங்க தயாராக இல்லை. இதனால் அதிமுக கூட்டணியில் சேர்க்க முடியாது என்று கூறி வந்த அமமுகவை கூட எடப்பாடி பழனிசாமி அனுசரித்து செல்கிறார். அதேபோல் இரு கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க தொடங்கிவிட்டனர்.

இதனால் தவெக தனித்தே தேர்தல் களம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தரப்பில் முதலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் விஜய் வைத்த டிமாண்ட் எங்கேயோ இருந்தது. இதனால் பின் வாங்கிய எடப்பாடி பழனிசாமி, உடனடியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். அதேபோல் விஜய்யும் கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் முன் நிறுத்தினார்.

கொள்கை எதிரியை பற்றி பெரியளவில் கூட பேசாத விஜய், திமுகவை மட்டும் ஒவ்வொரு முறையும் கடுமையாக விமர்சித்தார். இன்னும் சொல்லப் போனால் பாஜக என்ற பெயரையே விஜய் கூறவில்லை. அதேபோல் அதிமுகவையும் விஜய் பெரியளவில் விமர்சிக்கவில்லை. ஜெயலலிதாவை கூட மேடம் என்றே பொது மேடைகளில் அழைத்து வந்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி அமைத்த போது வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட விஜய் திமுகவையே சாடி இருந்தார். இந்த நிலையில் தவெகவின் செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் சில விஷயங்களை முதல்முறையாக பேசியுள்ளார். அதில் விஜய் பேசுகையில், தமிழ்நாட்டை இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் பாஜகவுக்கு அடிமையாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

அதனால் அவர்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிற இந்த திமுக அரசும் நமக்கு எதாவது செய்வார்கள் என்று பார்த்தால், இவர்களும் அவங்களை மாதிரியே தான். இன்னும் சொல்லப்போனால் ஒரு படி மேலே, இன்னும் மோசம். அவர்களாவது நேரடியாக சரண்டராகி இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மறைமுகமாக சரண்டராகி இருக்கிறார்கள், அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த தேர்தலுக்கு பின் தீயசக்தியிடம் இருந்தும், ஊழல்வாத அடிமை சக்தியிடம் இருந்தும் தமிழ்நாட்டை விட்டுவிட்டோம் என்று உறுதியாக அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். திமுகவை தீயசக்தி என்று விமர்சிக்கும் விஜய், ஊழல்வாத அடிமை கட்சி என்று அதிமுகவை விமர்சிக்க தொடங்கி இருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

இதனால் விஜய்யின் இந்த பேச்சிற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் அதிமுக விலகினால், தவெகவுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் என்டிஏ கூட்டணி பிரச்சாரத்தையே தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி இனி அமைய வாய்ப்பில்லை என்பதை புரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே விஜய் அதிமுகவையும் அட்டாக் செய்ய தொடங்கி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+