அதே டெய்லர்.. அதே வாடகை.. விஜய் காஸ்ட்யூமில் தவெகவினர்.. தேர்தலுக்கு சம்பவம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதிகட்ட பிரச்சாரத்தால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. வாக்குப்பதிவு நாளில் தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் விஜய்யின் டிரேட் மார்க் வெள்ளை சட்டை, சந்தன நிற பேன்ட் அரசியல் காஸ்ட்யூமை சீருடையாக அணிய உள்ளார்களாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியான, நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் போராடி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள்.

விஜய் காஸ்ட்யூம்
தவெகவுக்கு இது முதல் சட்டமன்ற தேர்தல். இந்த தேர்தலில் தவெக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்.
பொதுவாக விஜய் நடித்த படம் முதல் நாள் வெளியாகும்போது அந்தப் படத்தில் அவர் பயன்படுத்திய காஸ்ட்யூமை தான் அணிவார்கள். இந்த வருடம் ஜனநாயகன் படத்திற்கும் அதேபோல விஜய் ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். அரசியலில் நுழைந்த பிறகு விஜய் வெள்ளைச் சட்டை சந்தன கலர் பேன்ட் தான் அணிகிறார்.
தவெக மாஸ் பிளான்
ஜனநாயகன் அரசியல் படம் என்பதால் விஜய் ரசிகர்கள் வெள்ளை சட்டை, சந்தன கலர் பேன்ட் அணிய திட்டமிட்டிருந்தனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவின் போது தவெகவினர் ஒரே சீருடை அணிய திட்டமிட்டுள்ளார்கள். விஜய்யின் டிரேட் மார்க் வெள்ளை சட்டை சந்தன கலர் பேன்ட் அணிவதற்கு தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.
தமிழகம் முழுவதும் தவெகவினர், விஜய் ரசிகர்கள் இந்த காஸ்ட்யூமை அணியவுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் கட்சி கரைவேட்டி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. விஜய்யின் காஸ்ட்யூமை அணிந்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட தவெகவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
-
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications