தேர்தலில் போட்டியிட்டு தோற்க நாங்க முட்டாளா - தவெக கூட்டணியில் இருந்த ஒரே கட்சியும் எஸ்கேப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. மற்ற கட்சிகளில் எல்லாம் தொகுதி பங்கீடு பஞ்சாயத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன. தவெக வில் உள்ள ஒரே கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது [TVK Vijay].

tvk-vijay-tvk-s-only-alliance-party-tml-decide-to-not-contest-in-election

ஒரே ஒரு கட்சியும் குட்பை

நடிகர் விஜய் தவெக கட்சியின் முதல் மாநாட்டில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு. கூட்டணி ஆட்சி என்கிற திரியை கிள்ளி போட்டார். தற்போதுவரை விஜய் கட்சியுடன் யாரும் கூட்டணி சேரவில்லை. காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இணைவது போல ஆசையை காண்பித்து ஏப்ரல் ஃபுல் செய்துவிட்டனர். இப்போது கூட்டணியில் உள்ள ஒரே கட்சியும் பேக் அடிக்கிறார்களாம்.

தவெகவுடன் கூட்டணியில் உள்ள ஒரே கட்சி தமிழ்நாடு முஸ்லீம் லீக் தான். அவர்களை தவிர வேறு எந்தக் கட்சியும் தவெக கூட்டணியில் இணையவில்லை. இணைவதற்கான அறிகுறியும் கூட தென்படவில்லை. தேர்தலையொட்டி மற்ற கட்சிகள் எல்லாம் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தவெக கூட்டணி கட்சி

திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. இழுபறியாக இருந்த காங்கிரஸ் கட்சி கூட திமுக கூட்டணியில் இணைவதற்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டார்கள். தவெகவில் உள்ள ஒரே கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

கடைசியில் அவர்கள் தேர்தலில் போட்டியிடவே வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேர்தலில் ஏன் போட்டியிட விருப்பமில்லை என தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ள காரணங்கள் தான் செம ஹைலைட். தமிழ்நாடு முஸ்லீம் லீக் ஆரம்பத்தில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தான் ஆதரவளித்திருந்தனர்.

தேர்தலில் போட்டியில்லை

கடந்த மாதத்தில் அவர் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆகியோரை சந்தித்து அதிகாரபூர்வமாக கூட்டணியில் இணைந்தனர். தவெக நிகழ்ச்சிகளிலும் முஸ்தபா கலந்து கொண்டு வருகிறார். தவெகவுக்காக ஊடக விவாதங்களிலும் முஸ்தபா கலந்து வருகிறார்

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்தக் கட்சியும் அதிக டிமேண்ட் செய்யும், அந்தக் கட்சிக்கு தவெகவில் அதிக இடங்கள் கொடுக்கும் என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கணக்கு போட்டார்கள். ஆனால் ஆசை ஆசையாக தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் புஸ் ஆவது போல, தவெக வில் இணைந்த ஒரே கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் தேர்தலில் போட்டியில்லை என முடிவு செய்துள்ளார்களாம்.

எதுக்கு இந்த கஷ்டம்

இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், "முஸ்தபா ரொம்பவே தெளிவானர். இந்த தேர்தலில் தவெக 10-15 சதவீதம் வாக்குகளை பெறும். அதை வைத்து வெற்றி பெற முடியுமா. கஷ்டப்பட்டு சீட் வாங்கி, செலவு செய்து தோற்க வேண்டுமா. இது முட்டாள்தனமான முடிவு. எனவே தேர்தலில் நான் உள்பட என் கட்சியினர் யாரும் போட்டயில்லை என முஸ்தபா முடிவு செய்துள்ளாராம்.

இது கூட பரவாயில்லை.. தவெகவினர் யாருக்காது சீட் வேண்டும் என்றால் சொல்லுங்கள் உங்கள் தலைமையினரிடம் பேசி வாங்கி தருகிறேன் என டீலிங்கில் இறங்கிவிட்டாராம். அவரிடம் பேசினால் தவெகவினரே தேர்தலில் போட்டியிடுவதை யோசிப்பார்கள் என்றனர். இந்த பிரச்சனைகள் எல்லாம் முஸ்தபாவின் காதுகளுக்கு சென்றுள்ளது. அவர் சர்வ சாதாரணமாக, வெக பேச்சுவார்த்தை குழு அமைக்கட்டும். பிறகு பேசுவோம்" என்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+