மகளிருக்கு மாதம் ரூ.2,500.. குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. தவெக தேர்தல் வாக்குறுதிகள் விஜய் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக ஆகியோரும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் தவெக சார்பில் மகளிருக்கான வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டுள்ளார். மாதம் ரூ.2,500 உதவித் தொகை, தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

தவெக வாக்குறுதிகள்
இதில் தவெக தலைவர் விஜய் மகளிருக்காக தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "பெண்களுக்கு தனி இலாகா அமைக்கப்படும். மகளிர் இலாகா என் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். வெற்றிப் பயணம் திட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் செய்யலாம். பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட் பேனல் பட்டன் பொருத்தப்படும்.
ரூ.2,500 உதவித்தொகை
60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். ரேஷ்ன் கடைகள், பள்ளிகளில் விலையில்லா நாப்கின் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களில் 5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்
அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 6 சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலு நாச்சியார் படை அமைக்கப்படும்.
ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ்
மாநிலம் முழுவதும் 5000 குழுக்கள் அமைத்து பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், சிசிடிவி இல்லாத இடங்களே இருக்கக் கூடாது என்பதற்காக ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ் உருவாக்கப்படும்
ஒரு பவுன் தங்கம், பட்டுசேலை
பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கமும், தரமான பட்டு சேலையும் வழங்கப்படும். கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையில், காமராஜர் கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும். 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்க ஒவ்வொரு தாய்மார்களுக்கும், அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் ரூ. 15 ஆயிரம் பொருளாதார உதவித்தொகை வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் ஒரு தங்க மோதிரம் மற்றும் பேபி கிட், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படும். சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும்" என்றார்.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி












Click it and Unblock the Notifications