234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் வேணுமே.. தவெக அரசியலுக்கு பெரிய அடி.. தனித்து விடப்பட்ட விஜய்? போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாம். இதனால் விஜய் கிட்டத்தட்ட தமிழக அரசியலில் ஓரம்கட்டப்பட்டு உள்ளார். இதன் காரணமாக 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தேர்தலில் நிற்க வைக்கவே எல்லா தொகுதிக்கும் "தகுதியான" வேட்பாளர்கள் இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய போது விஜய் கூட்டணிக்கு திட்டமிடவில்லை. அவரின் திட்டம் எல்லாம் மூன்றாவது அணியாக ஒரு கூட்டணி அமைப்பது. அதாவது விசிக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி. ஆனால் அதிமுக, திமுக உடன் கூட்டணி இல்லை என்பதே விஜயின் திட்டமாக இருந்தது.

ஆனால் விஜயுடன் இணைந்த சில தலைகள்தான் அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வருகிறோம். அதிமுக வரும். அப்படி வந்தால் நாம்தான் கூட்டணி ஆட்சி. இரண்டரை வருடம் நீங்கள் முதல்வர். அல்லது துணை முதல்வர் என்றெல்லாம் ஆசை காட்டி விஜயை உள்ளே இழுத்துள்ளனர். அதாவது விஜய்க்கு கூட்டணி ஆசையை காட்டி உள்ளனர்.

ஆனால் இப்போது அந்த கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு புதிது என்பதால் அதிமுக கூட்டணி வந்த போதே அதை ஏற்காமல் மிஸ் செய்துள்ளார். அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

TVK Vijay upset after AIADMK-BJP alliance He has to find 234 candidates all over Tamil Nadu

விஜய் தனியாக இருக்கிறார்?

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் விஜய் கிட்டத்தட்ட தமிழக அரசியலில் ஓரம்கட்டப்பட்டு உள்ளார். முதலில் இந்த மோதல் திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி என்ற பைபோலார் மோதலாக மாறி விட்டது. இரண்டு தரப்பிடமும் அதிகாரம் உள்ளது. டெல்லி அரசு vs மாநில அரசு. இரண்டு தரப்பிலும் பணம் உள்ளது. திமுகவிற்கு இது வாழ்வா சாவா தேர்தல். பாஜகவிற்கு இது ஈகோ யுத்தம்.

அப்படி இருக்க விஜய் சீனிலேயே இல்லை. அதிலும் விஜயிடம் உள்ளூர் தலைகள் இல்லை. பூத் கமிட்டி இல்லை. விஜயை தாண்டி வசீகரமான முகம் இல்லை. அதிலும் அவர் சினிமாவில் இன்னும் நடிக்கிறார். படம் முடிய வருட கடைசி ஆகும். இதை எல்லாம் வைத்துக்கொண்டு விஜய் அரசியலில் எதுவும் செய்ய முடியாது.

இதற்காகவே அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றார். அதிமுகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை கூட நடத்தினார். ஆனால் இப்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாம். இதனால் கட்சியின் டாப் தரப்பினர்.. முக்கியமாக தலைமையே.. அதாவது விஜயே இந்த கூட்டணியால் அதிருப்தியில்தான் இருக்கிறாராம்.

போட்டியிட ஆட்கள் இருப்பார்களா

விஜயின் கூட்டணியில் யாருமே சேரவில்லை. இதனால் இப்போது 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை போட வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தேர்தலில் நிற்க வைக்கவே எல்லா தொகுதிக்கும் "தகுதியான" வேட்பாளர்கள் இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

234 தொகுதிகளுக்கு அவ்வளவு எளிதாக எல்லாம் வேட்பாளர்களை போட முடியாது. முதலில் அவர்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்களை முன்மொழிய, வேட்பு மனு தாக்கல் செய்வதில் கையெழுத்து போட ஆட்கள் தேவை. சாதாரணமாக ரசிகர்களாக இருக்கும் நபர்களை கொண்டு வந்து வேட்பாளர்களாக நிறுத்திவிட முடியாது. முறையான ஆவணங்கள் இல்லை என்றால் வேட்புமனுக்கள் ஏற்கப்படாமல் போகலாம். அதிமுக, திமுகவிற்கு கூட எல்லா தொகுதிகளுக்கும் "தகுதியான".. மக்கள் ஆதரவு பெற்ற, தெரிந்த முகம் கொண்ட நபர்களை தேர்வு செய்வது கஷ்டம். தமிழக வெற்றிக் கழகத்திற்கு இது முடியவே முடியாத காரியம்.

இதனால் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தனித்து களமிறங்கும் விஜய்.. எத்தனை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே இறக்கினாலும் எத்தனை பேர் அதில் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+