விசிகவுக்கு விஜய் கொடுத்த ஆஃபர்.. தவெகவுடன் கூட்டணியா.. திருமாவளவன் புது ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தேர்தலுக்கு பிறகு என்று இரண்டாக மாறலாம். தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றனர். ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் தவெகவுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துள்ளது. இதேபோல விசிகவுக்கும் ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவு செய்யவுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று விசிக உயர்நிலைக் குழுவில் முடிவு செய்துள்ளோம். நாங்கள் தவெக தலைவரோடு இந்த ஆட்சியில் அதிகார பகிர்வு செய்வது தொடர்பாக எதுவும் பேசவில்லை. அவர்கள் விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

விசிகவுக்கு தவெக ஆஃபர்
பதவியேற்புக்கு பிறகு அதைப்பற்றி பேசலாம் என்று நாங்கள் சொல்லியுள்ளோம். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்டது. தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பது என்று முடிவு செய்துவிட்டனர். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி இல்லை. நாங்கள் திமுக கூட்டணியில் தொடரலாமா, காங்கிரசுடன் இந்தியா கூட்டணிக்கு செல்லலாமா என்பதை முடிவு செய்யவில்லை.
எங்கள் உயர்நிலைக் கூட்டத்தில் ஆலோசித்து 2 வாரங்களில் முடிவு செய்வோம். இந்தியா கூட்டணியில் திமுக தொடர்வதற்கு வாய்ப்பில்லை. திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அவையில் திமுக உறுப்பினர்களுக்கு தனியாக இருக்கைகள் ஒதுக்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
திமுக இனி காங்கிரஸ் உடன் அமர்ந்து மக்களவையில் பணி செய்ய முடியாது என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.
திமுகவின் நிலை
அதனால் இந்தியா கூட்டணியில் திமுக இடம் பெற வாய்ப்பில்லை. திமுக எதிர்காலம் என்பது பாதிப்படையவில்லை. சட்டமன்ற தேர்தலில் கூட திமுக 60 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதிக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக உள்ளனர். அவர்கள் சட்டமன்றத்தில் திறம்பட செயல்படவுள்ளார். எனவே அவர்களின் எதிர்காலம் பாதிப்படையும் சூழல் இல்லை" என்றனர்.
-
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்











Click it and Unblock the Notifications